2020 முதல் 2023 வரை $4.5 பில்லியன் மதிப்பில் வீட்டு மானியம் வழங்கப்பட்டது

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக), 2020 முதல் 2023 வரை புதிய அல்லது மறுவிற்பனை வீடு வாங்கியோருக்கு $4.5 பில்லியனுக்கும் அதிகமான வீட்டு மானியங்களை வழங்கியது.

அந்த நான்கு ஆண்டுகளில் ஏறத்தாழ 63,700 குடும்பங்கள் மேம்படுத்தப்பட்ட மத்திய சேம நிதி வீடமைப்பு மானியத்தைப் பெற்றன. முதல்முறையாக புதிய அல்லது மறுவிற்பனை வீடு வாங்கும் குடும்பங்களுக்கு $80,000 வரை மானியம் வழங்கப்படுகிறது.

இதர மானியங்கள் குறித்த விவரங்களை திங்கட்கிழமை வெளியிட்ட வீவக, 41,600 குடும்பங்கள் மத்திய சேம நிதி வீடமைப்பு மானியத்தைப் பெற்றதாகத் தெரிவித்தது. ஈரறை முதல் நாலறை மறுவிற்பனை வீடுகளை முதல்முறையாக வாங்குவோருக்கு $80,000 மானியம் வழங்கப்படுகிறது. ஐந்தறை அல்லது அதற்கும் பெரிய மறுவிற்பனை வீடுகளை வாங்குவோருக்கு $50,000 மானியம் வழங்கப்படுகிறது.

பெற்றோர் அல்லது பிள்ளைக்கு அருகில் அல்லது அவர்களுடன் சேர்ந்து வசிக்க மறுவிற்பனை வீடு வாங்குவோருக்கான மானியத்தின்கீழ் ஏறத்தாழ 44,700 குடும்பங்கள் $30,000 வரை பெற்றன.

இத்தகைய மானியங்கள் அண்மை ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டன அல்லது மேம்படுத்தப்பட்டன.

வீடு வாங்கியோரில் பத்தில் எட்டு பேர், கடந்த ஆண்டு மத்திய சேம நிதி பங்களிப்பு மூலம் வீவக வீட்டுக் கடனைச் செலுத்தியதை வீவக சுட்டியது. குறைந்த அல்லது ரொக்கக் கட்டணம் இல்லாமல் அவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தினர்.

வீட்டு உரிமைத் திட்டத்துக்கான 60 ஆண்டுகால நிறைவை வீவக திங்கட்கிழமை அனுசரித்தது.

1964ல் வீவக 99 ஆண்டுகால குத்தகையுடன் கூடிய வீடுகளைக் குடிமக்களுக்கு விற்கத் தொடங்கியது.

இன்றுவரை வீவக 1.25 மில்லியன் வீடுகளைக் கட்டியுள்ளது. சிங்கப்பூர்வாசி மக்கள்தொகையில் 80 விழுக்காட்டினர் அவற்றில் வசிக்கின்றனர். அவர்களில் 90 விழுக்காட்டினர் தங்கள் வீட்டிற்கு உரிமையாளராவர்.

தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, “வீடமைப்பு தொடர்ந்து கட்டுப்படியான விலையில், அனைவரையும் உள்ளடக்கியதாக, நியாயமானதாக இருப்பதை வரும் ஆண்டுகளில் நாங்கள் தொடர்ந்து உறுதி செய்வோம்,” என்றார்.

தோ பாயோவில் உள்ள எச்டிபி ஹப் நடுவத்தில் பிப்ரவரி 8ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய திரு லீ, அக்டோபரில் வீடுகளை வகைப்படுத்தும் புதிய முறையைச் செயல்படுத்துவதில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!