பரோட்டா சாப்பிட்டவருக்கு அதிர்ச்சி: சீனப் புத்தாண்டை முன்னிட்டு 10% கூடுதல் கட்டணம்

பரோட்டா சாப்பிட்டவருக்கு அதிர்ச்சி: சீனப் புத்தாண்டை முன்னிட்டு 10% கூடுதல் கட்டணம்

1 mins read
5718459a-0da9-4565-b1ba-c6f50adea083
வாடிக்கையாளரின் கட்டணச் சீட்டு. - படம்: ஸ்டாம்ப்

பொதுவாக, சீனப் புத்தாண்டு விழாக்காலத்தின்போது வாடிக்கையாளர்களுக்கு வர்த்தகங்கள் கூடுதல் கட்டணம் விதிப்பது வழக்கம்தான்.

ஆனால், பரோட்டாவும் பானமும் கேட்ட உணவுக்கடை வாடிக்கையாளர் ஒருவருக்கு, சீனப் புத்தாண்டுக்கான 10% கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று பின்னர் தெரியவந்தபோது அதிர்ச்சியாக இருந்தது.

சீனப் புத்தாண்டுக்கு முன்தினம் ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள ‘ஐஎம்எம்’ கடைத்தொகுதியில் ‘காஃபே ஓ’ என்ற கடையில் தனது கட்டணச் சீட்டைப் பார்த்த வாடிக்கையாளர் ஓங், அந்தக் கூடுதல் கட்டணம் குறித்து முன்னதாகவே ஏன் தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என எண்ணினார்.

இந்தக் கூடுதல் கட்டணம் குறித்து காசாளர் அருகே ஏதேனும் அறிவிப்பு உள்ளதா என்பதைப் பார்க்கச் சென்றபோது, ‘பிப்ரவரி 9 முதல் 12 வரை 10% விழாக்கால கட்டணம் இருக்கும்’ என்று மிகச் சிறிய எழுத்தில் ஓர் அறிவிப்பு இருந்ததை அவர் கவனித்தார்.

காயின் பரோட்டாவுக்கு $4, அதற்குச் சீனப் புத்தாண்டு கூடுதல் கட்டணம் 50 காசு. சூடான பானத்திற்கு $2.80, அதற்குக் கூடுதல் கட்டணமாக 30 காசு. இவ்வாறு ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதை வாடிக்கையாளரின் கட்டணச் சீட்டு காட்டியது.

குறிப்புச் சொற்கள்