தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரிட்டிஷ் போக்குவரத்து நிர்வாக நிறுவனத்தை $136 மில்லியனுக்கு வாங்கிய கம்ஃபர்ட்டெல்குரோ

1 mins read
bfe6eac2-89cb-4002-9b8c-76ce889ddb23
சிஎம்ஏசி நிறுவனத்தை வாங்கியதன் மூலம் பிரட்டனிலும் ஐரோப்பாவிலும் கம்ஃபர்ட்டெல்குரோ தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்த முடியும் என்று கம்ஃபர்ட்டெல்குரோவின் நிர்வாக இயக்குநரும் குழுமத் தலைமை நிர்வாகியுமான செங் சியாக் கியான் கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிரிட்டிஷ் நில போக்குவரத்து நிர்வாகம் மற்றும் வசிப்பிடக் கட்டமைப்பு நிபுணத்துவ நிறுவனமான சிஎம்ஏசி குழுமத்தை 80.2 மில்லியன் பவுண்டுக்கு (S$136 மில்லியன்) வாங்கியிருப்பதாக பிப்ரவரி 13ஆம் தேதியன்று கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் அறிவித்தது.

பரிவர்த்தனைகள் அனைத்தும் நிறைவுபெற்றதும் சிஎம்ஏசி குழுமம், கம்ஃபர்ட்டெல்குரோவின் நேரடியற்ற துணை நிறுவனமாகச் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு போக்குவரத்துச் சேவையை விரிவுப்படுத்த கம்ஃபர்ட்டெல்குரோ இலக்கு கொண்டுள்ளது.

இதற்கு ஏற்றாற்போல், ரயில், சற்றுப்பயணம், சுகாதாரப் பராமரிப்பு, வர்த்தகம் மற்றும் பொதுச் சேவைகள் ஆகியவற்றுக்குப் பலதரப்பட்ட அவசரகாலப் பயணிகள் போக்குவரத்துச் சேவையை சிஎம்ஏசி நிறுவனம் வழங்குகிறது.

பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், கிரீஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் அது தனது சேவையை வழங்குகிறது.

பயண இடையூறுகளைச் சமாளிக்க இந்நிறுவனம் உதவுகிறது.

சிஎம்ஏசி நிறுவனத்தை வாங்கியதன் மூலம் பிரட்டனிலும் ஐரோப்பாவிலும் கம்ஃபர்ட்டெல்குரோ தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்த முடியும் என்று கம்ஃபர்ட்டெல்குரோவின் நிர்வாக இயக்குநரும் குழுமத் தலைமை நிர்வாகியுமான செங் சியாக் கியான் கூறினார்.

குறிப்புச் சொற்கள்