பழுதான ‘சர்க்கிட் பிரேக்கர்’ சரிசெய்ய $3,590: அதிர்ச்சியில் குடியிருப்பாளர்

பழுதான ‘சர்க்கிட் பிரேக்கர்’ சரிசெய்ய $3,590: அதிர்ச்சியில் குடியிருப்பாளர்

1 mins read
90ad39ef-05a8-4c43-963b-353bcd3ea515
மின்சுற்று துண்டிப்பானைச் சரிசெய்ய $3,590 செலுத்த வேண்டிய அனுபவம் குறித்து குடியிருப்பாளர் பதிவிட்டார். - படங்கள்: இணையம்

சீனப் புத்தாண்டின் முதல் நாள் இரவு 11 மணியளவில் குடியிருப்பாளர் ஒருவரது வீட்டிலுள்ள மின்சுற்று துண்டிப்பான் எனப்படும் ‘சர்க்கிட் பிரேக்கர்’ பழுதாகிவிட்டது.

எவ்வளவோ முயன்றும் ஏன்டி செங் என்ற அந்தக் குடியிருப்பாளரால் அதைச் சரிசெய்ய முடியவில்லை.

இணையத்தில் விரைந்து தேடி ஒரு மின்பணியாளருடன் தொடர்புகொண்டு வீட்டுக்கு வரவழைத்தார்.

வந்தவர், சற்று ஆராய்ந்துவிட்டு பழுது வேலைக்கு $3,590 செலவாகும் என்று கூறிவிட்டார்.

பிள்ளைகள் தூங்க முடியாது, குளிர்பதனப் பெட்டியிலுள்ள உணவு கெட்டுவிடும் என்றெல்லாம் நினைத்துப் பார்த்த ஏன்டி, அந்தத் தொகையைச் செலுத்தச் சம்மதித்தார்.

எரிந்துபோன ‘சர்க்கிட் பிரேக்கர்’ பகுதியை அந்த மின்பணியாளர் கழற்றியும் காட்டினார்.

எல்லாம் சரியாகிவிட்ட பின்னும் கட்டணம் அதிகமாக உள்ளதே என்ற குமுறல் ஏன்டிக்கு.

பின்னர், அந்த மின்பணியாளரிடம் கட்டணம் குறித்து விவரம் கேட்டபோது, வேலைத்திறனுக்கு $1,125, பழுதுபார்ப்பு வேலைக்கு $625, சீனப் புத்தாண்டு காலம் என்பதால் வேலைத்திறனுக்கும் பழுதுபார்ப்பு வேலைக்கும் இருமடங்குக் கட்டணம், அவசர அழைப்புக்கு $90 என்று தெரிவித்தாராம்.

அதிகச் செலவுமிக்க ஒரு பாடம் இது என்று ஏன்டி இணையத்தில் பகிர்ந்துகொண்டதை அடுத்து ஒரே இரவில் $3600 ஈட்ட முடிந்ததால் தாங்களும் மின்பணியாளர் ஆகப் போவதாக இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்