தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘கரையோரப் பூந்தோட்டங்களில் வேகமாக சைக்கிள் ஓட்ட வேண்டாம்’

1 mins read
11e9b4bc-9562-42f6-a303-827558bd652c
காணொளியில் உடும்புமீது சைக்கிள் ஏறியது தெளிவாகத் தெரிந்தது. - படம்: சமூக ஊடகம்

கரையோரப் பூந்தோட்டங்களில் வேகமாக சைக்கிள் ஓட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டடுள்ளது.

விலங்குகள் நடமாடும் பகுதிகளில் வேகத்தை குறைத்துகொண்டு கவனமாக சைக்கிள் ஓட்டுமாறும் வலியுறுத்தப்பட்டது.

அண்மையில் கரையோரப் பூந்தோட்டங்களில் சைக்கிள் ஒன்று உடும்புமீது மோதிச் செல்லும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியானது. காணொளியில் உடும்புமீது சைக்கிள் ஏறியது தெளிவாகத் தெரிந்தது.

சைக்கிள் ஓட்டுபவர்கள் வேகத்தைக் குறைத்துக்கொண்டு விலங்களுக்கும் மற்றவர்களுக்கும் எந்த இடையூறும் இல்லாமல் நடந்துகொள்ளுமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர்.

குறிப்புச் சொற்கள்
விலங்குவிபத்து