டாக்சி, தனியார் வாடகை கார் சேவைகள் திருப்தி தருகின்றன

டாக்சி, தனியார் வாடகை கார் சேவைகள் திருப்தி தருகின்றன

1 mins read
549c12f3-ac5c-45f3-848b-b4f66eb7e8c3
டாக்சி, தனியார் வாடகை கார் சேவைகளுக்காக வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நேரமும் குறைந்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

டாக்சி, தனியார் வாடகை கார் சேவைகள் திருப்தி தருவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்டுத்தோறும் பொதுப் போக்குவரத்து மன்றம் நடத்தும் ஆய்வின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டது.

ஆய்வு 1500 பேரிடம் நடத்தப்பட்டதாக மன்றம் கூறியது.

2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் டாக்சி சேவையின் 2023ஆம் ஆண்டு சேவை தரநிலை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு தரநிலை 8.3.

2022ஆம் ஆண்டு அது 8.1ஆக இருந்தது.

‘கிராப்’, ‘கோ ஜெக்’ உள்ளிட்ட தனியார் வாடகை கார் சேவைகளின் தரநிலையும் 8.1ஆக உயர்ந்துள்ளது. 2022ஆம் ஆண்டு அது 7.9ஆக இருந்தது.

டாக்சி, தனியார் வாடகை கார் சேவைகளுக்காக வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நேரமும் குறைந்துள்ளதாக மன்றம் குறிப்பிட்டது.

ஆய்வில் கலந்துகொண்டவர்கள் வாரத்திற்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை டாக்சி, தனியார் வாடகை கார் சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் என்று பொதுப் போக்குவரத்து மன்றம் கூறியது.

குறிப்புச் சொற்கள்