இணையம்வழி வேலை வாய்ப்பு மோசடி: 461 பேர் $6.8 மில்லியன் இழப்பு

இணையம்வழி வேலை வாய்ப்பு மோசடி: 461 பேர் $6.8 மில்லியன் இழப்பு

1 mins read
6e243b05-5bd9-4eea-acb7-befbafa3fdf5
முன்பின் அறிமுகம் இவ்லலாதவர்கள் இணையம்வழி கலந்துரையாட அழைக்கும்போதோ குறுந்தகவல்கள் மூலம் வேலை அல்லது முதலீடு வாய்ப்புகள் தருவதாகவோ ஆசை காட்டினால் எச்சரிக்கையுடன் இருக்கும்படி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இணையக் கலந்துரையாடல் செயலிவழி குறைந்தது 461 பேர் மொத்தம் $6.8 மில்லியனை இவ்வாண்டு இதுவரை இழந்துள்ளனர் என்று புதன்கிழமையன்று (பிப்ரவரி 14) காவல்துறை தெரிவித்தது.

வாட்ஸ்அப், டெலிகிராம், போன்ற தகவல் பரிமாற்ற தடங்களில் முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் ஒருவர் பெயரை சேர்த்து வேலை வாய்ப்பு தருவதாக ஆசை காட்டினால் அதில் விழாமல் எச்சரிக்கையுடன் இருக்கும்படி காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுபோன்ற முதலீட்டு மோசடிகளில் பாதிக்கப்படுபவர் மோசடிக்காரர்களால் தகவல் பரிமாற்றக் குழுக்களுடன் சேர்க்கப்படுவர். அதில் மற்றவர்கள் (தாங்கள் மோசடிக்கு ஏதுவாக) லாபம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் மோசடிக்காரர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது போலவும் போலியான பத்திரங்களை பதிவேற்றுவர்.

இதில் ஏமாந்து தொடர்புகொள்பவர்கள், மோசடி முதலீட்டு தொகுப்புகளில் சேருமாறு அழைக்கப்படுவர். பின்னர் அவர்களின் தனிப்பட்ட விவரங்கள், வங்கிக் கணக்கு ஏற்படுத்த வேண்டும் எனக் கூறி மோசடியில் சிக்கியவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை மோசடிக்காரர்கள் பெறுவர்.

இதைத் தொடர்ந்து பேநவ், வங்கிக் கணக்கு அல்லது கிரிப்டோ கரன்சி பணப்பை மூலமாகவோ பணப் பரிமாற்றம் செய்யும்படி கூறுவர்.

மோசடிக்காரர்கள் போலியான முதலீட்டுத் தளங்களுக்கு பாதிக்கப்படுவர்களை இட்டுச் செல்ல ஏதுவாக ‘விபிஎன்’ செயலியைப் பதிவிறக்கம் செய்யவும் கூறுவர் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
நிதி மோசடி

தொடர்புடைய செய்திகள்