சாலையில் மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட பெண்

சாலையில் மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட பெண்

1 mins read
2bb88cb2-50d4-4fc3-9695-ae402dd9bd21
எலைன் மிஷெல் சமையல் கற்றுத்தருபவர் என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தன - படம்: ராய்ட்டர்ஸ்

ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் சைக்கிளோட்டி ஒருவரிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட பெண் ஓட்டுநர் தமது குற்றங்களை வியாழக்கிழமை அன்று ஒப்புக்கொண்டார்.

எலைன் மிஷெல் என்னும் 49 வயது பெண் கடந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் கார் ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது அவர் சைக்கிளோட்டி ஒருவரை கவனக்குறைவாகக் கடந்து சென்றுள்ளார்.

பின்னர் ஒரு சாலை சந்திப்பில் வாகனங்கள் நின்றுகொண்டிருந்த போது மிஷெலை சைக்கிளோட்டி கவனமாக காரை ஓட்டுமாறு கண்டித்துள்ளார். அதன் பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சாலையில் மீண்டும் காரை ஓட்டிய போது சைக்கிளோட்டி மிசெலின் பாதையை வேண்டுமென்றே மறைத்தார். அதன் பின்னர் மிஷெல் சைக்கிளோட்டி மீது காரைக்கொண்டு உரசினார்.

அந்தச் சம்பவம் குறித்த காணொளியும் நீதிமன்றத்தில் ஆராயப்பட்டது. விசாரணையின்போது தமது குற்றத்தை மிஷெல் ஒப்புக்கொண்டார்.

மிசெல், சமையல் கலை பயிற்றுவிப்பாளர் என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தன

வழக்கு குறித்த மேல் விசாரணை மார்ச் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக சைக்கிளோட்டி டான் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்