11 வயது சிறுமியை கொடுமைப்படுத்திக் கொன்ற வளர்ப்புத் தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை

11 வயது சிறுமியை கொடுமைப்படுத்திக் கொன்ற வளர்ப்புத் தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை

1 mins read
62e7e6fb-b475-4401-b38a-e8adfd5bdf38
படம்: - பிக்சாபே

11 வயது சிறுமியைக் கொடுமைப்படுத்தி கொன்ற வளர்ப்புத் தந்தைக்கு 15 ஆண்டுகள், 11 மாதம் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டது.

தற்போது 29 வயதாகும் வளர்ப்புத் தந்தையான முகமது ஃபாசில் செலாமட், மெதுவாக சாப்பிட்ட சிறுமியை உடற்பயிற்சிக்குப் பயன்படுத்தப்படும் கம்பியால் பல முறை தாக்கியிருக்கிறார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமி, நான்கு நாள்களுக்குப் பிறகு உயிரிழந்தார்.

நவம்பர் 2020ஆண்டு நடந்த இந்த கொடூரச் சம்பவத்தில் சிறுமியின் தாயாரான தற்போது 30 வயதாகும் ரோஸ்லிண்டா ஜமில் தலையிடாமல் இருந்துவிட்டார். இவருக்கு ஏழு ஆண்டுகள், எட்டு மாதம் 3 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ரோஸ்லிண்டாவும் ஃபாஸிலும் தங்களுடைய குற்றத்தை 2023 பிப்ரவரியில் நடந்த விசாரணையில் ஒப்புக் கொண்டனர்.

ரோஸ்லிண்டா ஜமீல், ஒரே வீட்டில் ஒரு குழந்தையின் இறப்பை அனுமதித்ததற்காக தண்டனை பெற்ற முதல் நபர் ஆவார்.

இந்தச் சட்டம், 2020ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. துன்புறுத்தல்களிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கத் தவறியவர்களை இலக்காகக் கொண்டு இந்தச் சட்டம் இயற்றப்பட்டது.

முன்னதாக தம்பதியின் பெயரை வெளியிட தடை விதிக்கப்பட்டது.

ஆனால், தண்டனை விதிக்கப்பட்ட பிறகு அவர்களுடைய பெயரை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதை உயர் நீதிமன்ற நீதிபதி பாங் காங் சாவ் பிப்ரவரி 15ஆம் தேதி ஏற்றுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்