தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓசிபிசி வங்கி மோசடி: கும்பலில் இருந்ததை ஒப்புக்கொண்ட ஆடவர்

1 mins read
a53f3651-e6ab-445b-9d9d-2bc95080e60c
படம்: - தமிழ் முரசு

ஓசிபிசி வங்கி வாடிக்கையாளர்கள் பலர் மொத்தமாக $12.8 மில்லியனை இழக்க வழிவகுத்த இணைய மோசடிகளுடன் தொடர்புடைய ஜோவன் சோ ஜுன் யான், 21, கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றும் சேவைகளை வழங்க மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றியதை ஒப்புக்கொண்டார்.

அவர், மற்ற சிலருடன் சேர்ந்து, முன்பின் அறிமுகமில்லாத நபர்களுடைய வங்கிக் கணக்குகளை வெளிநாடுகளிலிருந்து இயங்கும் கும்பல்களோடு பகிர்ந்துகொண்டதாக நம்பப்படுகிறது.

இந்த வங்கிக் கணக்குகளில் சில, ஓசிபிசியின் வாடிக்கையாளர்கள் உட்பட, பாதிக்கப்பட்டவர்கள் பலரிடமிருந்து நிதியைப் பெறவும் செலவிடவும் பயன்படுத்தப்பட்டன.

எட்டு நபர்களைக் கொண்ட சோவின் குழு, மோசடியில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மொத்தம் $599,407 வெள்ளியை ஏமாற்றிப் பெற்றுக்கொண்டனர் என்று அரசு வழக்கறிஞர் ஜேசன் சுவா கூறினார்.

வியாழக்கிழமை (பிப்ரவரி 15) மூன்று குற்றச்சாட்டுகளை சோ ஒப்புக்கொண்டார். அவற்றில், பணமோசடியும் குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல் ஒன்றின் உறுப்பினராக இருந்ததும் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்