பிப்ரவரி 23ல் ‘ஏ’ நிலை தேர்வு முடிவுகள்

பிப்ரவரி 23ல் ‘ஏ’ நிலை தேர்வு முடிவுகள்

1 mins read
ec4f3071-3f6e-468c-b28c-78c0354566a8
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அவரவர் பள்ளிகளுக்கு நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம் அல்லது இணையம் மூலம் பெற்றுக்கொள்ளலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த ஆண்டு ‘ஏ’ நிலை தேர்வு எழுதிய மாணவர்கள் பிப்ரவரி 23ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்குத் தேர்வு முடிவுகளைப் பெறுவர்.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அவரவர் பள்ளிகளுக்கு நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம் அல்லது இணையம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வுகள், மதிப்பீடு வாரியமும் பிப்ரவரி 16ஆம் தேதியன்று தெரிவித்தன.

நோய்வாய்ப்பட்டுள்ள மாணவர்கள் வீட்டிலேயே இருந்து வாரியத்தின் வேட்பாளர் இணையவாசலான seab.gov.sg மூலம் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பிப்ரவரி 23ஆம் தேதி பிற்பகல் 3.15 மணியிலிருந்து மார்ச் மாதம் 7ஆம் தேதி இரவு 11.59 மணி வரை இணையவாசல் மூலம் ‘ஏ’ நிலை தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

சிங்பாஸ் உள்ளவர்கள் அதைப் பயன்படுத்தி இணையவாசல் மூலம் தங்கள் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

இணையவாசல் மூலம் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ள அனைத்துலக மாணவர்களுக்கு அதற்கான பயனாளர் விவரம் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்படும்

தனித்தேர்வர்கள் சிங்பாஸ் பயன்படுத்தி இணையவாசல் மூலம் தங்கள் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

சிங்பாஸ் இல்லாதவர்கள், தேர்வுக்குப் பதிவு செய்தபோது உருவாக்கிய இணையவாசல் கணக்கைப் பயன்படுத்தி தேர்வு முடிவுகளை பிப்ரவரி 23ஆம் தேதி பிற்பகல் 3.15 மணி முதல் பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்
தேர்வு