மின்சிகரெட் பொருள்களைப்பயன்படுத்தினால் அபராதம்

1 mins read
8638fafa-9969-488d-9c6e-5719985bff82
சுகாதார மேம்பாட்டு வாரியம் புகைப்பிடித்தலை கைவிட உதவும் ‘ஐ குவிட்’ திட்டத்தை நடத்தி வருகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புகைபிடிப்பதை கைவிடுவதற்காக ஐ குவிட் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்பவர்கள் மின்சிகரெட் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதோ, வைத்திருப்பதோ இல்லை.

இதனால் தங்களுக்கு அபராதம் அல்லது தங்கள் மீது வழக்குத் தொடுக்கப்படும் என்று அஞ்சத் தேவையில்லை.

ஆனால் அதே சமயத்தில் இத்தகைய பொருள்களைப் பயன்படுத்துவது அல்லது வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது அபராதம் அல்லது வழக்குத் தொடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி இதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான இணைப் பேராசிரியர் ஜேமஸ் ஜேரோம் லிம், சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் ஐ குவிட் திட்டத்தில் பங்கேற்பாளர்கள் வழக்குத் தொடுப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்களா என்று கேள்வி எழுப்பினார்.

இந்தத் திட்டத்தின்மூலம் எத்தனை பேர் பலனடைந்தனர் என்றும் அவர் கேட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்த டாக்டர் ஜனில் புதுச்சேரி, திட்டத்தில் பங்கேற்பவர்கள் மின்சிகரெட் தயாரிப்புகளை வைத்திருப்பதாகவோ பயன்படுத்துவதாகவோ கருதவில்லை என்றார்.

ஆனால் அவர்கள் பிடிபட்டால் மற்றவர்களைப் போல அதே அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.

2014 மே மாதத்திலிருந்து ஐ குவிட் திட்டத்தில் மொத்தம் 112,000 பேர் பங்கேற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்