தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் குடும்பங்களுக்கு கூடுதலாக $600 சிடிசி பற்றுச்சீட்டுகள்

1 mins read
58124756-bc32-4b32-9923-be37d7619b90
2024 ஜூன் இறுதியில் வழங்கப்படும் பற்றுச்சீட்டுகள் ஆண்டிறுதியில் காலாவதியாகும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் குடும்பங்களுக்கு அரசாங்கம் கூடுதலானவற்றைச் செய்து உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தை மேம்படுத்தும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

அனைத்து சிங்கப்பூர் குடும்பங்களுக்கும் கூடுதலாக $600 பெறுமானமுள்ள சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும். முதல் தொகுதியாக $300, 2024 ஜூன் இறுதிக்குள் வழங்கப்படும். 2025 ஜனவரியில் எஞ்சிய $300 வழங்கப்படும்.

2024 ஜூன் இறுதியில் வழங்கப்படும் பற்றுச்சீட்டுகள் ஆண்டிறுதியில் காலாவதியாகும். 2025 ஜனவரியில் வழங்கப்படும் பற்றுச்சீட்டுகள் அடுத்த ஆண்டிறுதியில் காலாவதியாகும்.

குறிப்புச் சொற்கள்
பட்ஜெட் 2024வரவுசெலவுத் திட்டம்