நிறுவனங்களின் புத்தாக்கம், பசுமை மாற்றத்திற்கு வரிக் கழிவு

2 mins read
eabf03de-b2cc-40c9-9068-74310f10da8b
நிறுவனங்களின் புத்தாக்கம், பசுமை மாற்றத்திற்கு ஆதரவு அளிக்க புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தரமான முதலீடுகளை ஈர்ப்பதற்கு உலகளாவிய போட்டி நிலவும் வேளையில் உயர்மதிப்புள்ள மற்றும் முக்கிய பொருளியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய வரிக்கழிப்பு திட்டத்தை சிங்கப்பூர் அறிமுகப்படுத்துகிறது.

ஆர்ஐசி எனும் புதிய திருப்பித் தரப்படும் முதலீட்டுத் தொகை, திருப்பியளிக்கப்படும் ரொக்க அம்சத்தைக் கொண்டிருக்கும்.

இதனை சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகமும் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும் வழங்குகின்றன.

இது, ஒரு நிறுவனத்தால் செய்யப்படும் தகுதிச் செலவினங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

மனிதவளச் செலவுகள், நிபுணத்துவக் கட்டணங்கள், பொருள்கள் மற்றும் நுகர்பொருள்கள், சரக்கு மற்றும் தளவாடச் செலவுகள் மற்றும் மூலதனச் செலவுகள் ஆகியவை தகுதிபெறும் செலவினப் பிரிவுகளாகும்.

ஒவ்வொரு தகுதிச் செலவினப் பிரிவிலும் நிறுவனங்களுக்கு 50 விழுக்காடு வரை ஆதரவு வழங்கப்படும்.

ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்படும் திருப்பித் தரப்படும் முதலீட்டுத் தொகை வேறுபட்ட தகுதி செலவு பிரிவுகளைப் பொறுத்து இருக்கும்.

ஒவ்வொரு பிரிவிலும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஆதரவு விகிதம் இருக்கும். இது பொருளியல் வெளிப்பாடுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆர்ஐசிக்கும் 10 ஆண்டுகள் வரை தகுதிக் காலம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வருமான வரியை இந்த வரிக் கழிப்பை வைத்து ஈடுசெய்யலாம்.

வரிக்கழிப்பைப் பெறுவதற்கான நிபந்தனைகளை நிறுவனம் பூர்த்தி செய்ததிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்படாத வரிக்கழிப்பு அனைத்தும் நிறுவனத்திற்கு ரொக்கமாகத் திருப்பித் திருப்பியளிக்கப்படும்

நிதி அமைச்சரும் துணைப் பிரதமருமான லாரன்ஸ் வோங் பிப்ரவரி 16 அன்று தனது வரவுசெலவுத் திட்ட உரையின்போது இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
வரவுசெலவுத் திட்டம்