வெளிநாட்டு மனிதாபிமான உதவிகளுக்கு வழங்கும் நன்கொடைகளுக்கு வரிக்கழிவு

வெளிநாட்டு மனிதாபிமான உதவிகளுக்கு வழங்கும் நன்கொடைகளுக்கு வரிக்கழிவு

படம்: கெய்ரோவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் ஃபேஸ்புக்

16 Feb 2024 - 8:55 pm

1 mins read

வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகளுக்கு நன்கொடை வழங்கும் சிங்கப்பூரர்கள் 100 விழுக்காடு வரிக்கழிவுக்கு கோரிக்கை விடுக்க முடியும்.

சிங்கப்பூரையும் தாண்டி வெளிநாட்டு நிவாரணப் பணிகளுக்கு உதவும் சிங்கப்பூரர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த வரிக்கழிவு கொண்டு வரப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மனிதநேய நன்கொடைகளுக்கான வரிக் கழிவுத் திட்டம் முன்னோடித் திட்டமாக ஜனவரி 1, 2025லிருந்து டிசம்பர் 31, 2028 வரை நான்கு ஆண்டுகளுக்குச் செயல்படுத்தப்படும்.

துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.

2023ல் துருக்கி, சிரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கம் போன்ற பேரிடர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் பிரச்சினையில் உருவான மனிதாபிமான நெருக்கடி போன்றவற்றில் சிங்கப்பூரர்கள் முன்வந்து மனிதாபிமான உதவிகளை வழங்கியதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் புதிய வரிக் கழிவை, பிளவுபட்டுள்ள உலகில் தேவைப்படுவோருக்கு உதவ சிங்கப்பூரர்களை மேலும் ஊக்குவிக்கும் என்று திரு லாரன்ஸ் வோங் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்