தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடியரசு ஆகாயப் படை கண்காட்சியில் ஒருங்கிணைந்த போர்விமானக் காட்சி

1 mins read
f2bc700e-de53-48a8-b16f-5d3d15e427fe
குடியரசு ஆகாயப் படை எஃப்-15எஸ்ஜி ரக போர்விமானம், ஏஎச் ரக அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர் ஆகிய விமானங்களின் ஒருங்கிணைந்த ஆகாயக் காட்சிப் படம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் ஆகாயப் படை தனது 2024ஆம் ஆண்டு ஆகாயக் கண்காட்சியில் எஃப்-15எஸ்ஜி ரக, ஏஎச்-64டி ரக போர் விமானங்களை காட்சிப்படுத்த உள்ளது.

ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆகாய, தற்காப்பு துறை கண்காட்சியில் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை இரண்டு புதிய ஒருங்கிணைந்த காட்சிகளைப் படைக்கும்.

இவை 12 காட்சிகளின் ஒரு பகுதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் நான்கில் எஃப்-15எஸ்ஜி ரக போர்விமானங்கள் மட்டுமே பங்கேற்கும்.

இதைத் தொடர்ந்து மேலும் நான்கு காட்சிகளில் ஏஎச்-64டி ரக போர்விமானங்கள் பங்குபெறும். அதன்பின்னர், மேலும் நான்கு காட்சிகளில் இவ்விரு ரக போர்விமானங்களும் ஒருங்கிணைந்த காட்சிகளை படைக்கும். இந்த ஒருங்கிணைந்த காட்சி 11 நிமிடங்கள் நீடிக்கும்.

கடந்த 2022ஆம் ஆண்டு சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் கண்காட்சியில் எஃப்-16சி ரக, இரு ஏஎச்-64டி ரக போர்விமானங்கள் ஐந்து காட்சிகளைப் படைத்தன.

இவ்விரண்டு போர்விமானங்களும் முதல் முறையாக 2016ஆம் ஆண்டு ஆகாயக் கண்காட்சியில் பங்கேற்றன.

குறிப்புச் சொற்கள்