டெக் வாய் கிரெசென்டில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் அதே வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் புதிய பேருந்து சேவை மார்ச் 18ஆம் தேதி முதல் கிடைக்கும்.
பேருந்து சேவை 983M வார நாட்களில், காலையில் இரண்டு பயணங்களை மேற்கொள்ளும்.
முதல் பயணம் காலை 6.40 மணியளவிலும் , இரண்டாவது பயணம் காலை 7 மணியளவிலும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
டெக் வாய் தொடக்கப்பள்ளி, சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி, ஜூரோங் பைனியர் தொடக்க கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்தப் பேருந்து சேவை பயனளிக்கும்.
இந்தச் சேவை, புளோக் 486க்கு எதிரே உள்ள சுவா சூ காங் அவென்யூ 5லிருந்து தொடங்கி, மூன்று பள்ளிகளுக்கு அருகில் அமைந்துள்ள டெக் வாய் வாக்கிற்குப் பிறகு அமைந்துள்ள புதிய பேருந்து நிறுத்தம் ஒன்றில் முடிவடையும்.
பயணிகளை இறக்கிவிடுவதற்கு மட்டுமே இந்தப் பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது.
பள்ளி விடுமுறைகளிலும் வார இறுதி நாட்களிலும் பேருந்து சேவை இருக்காது.

