கிராண்ட்மாஸ்டர் என்பது சதுரங்க ஆட்ட வீரர் அடையக்கூடிய மிக உயர்ந்த பட்டமாகும்.
அப்படிப்பட்ட ஒரு கிராண்ட்மாஸ்டரை சிங்கப்பூரில் வசிக்கும் 8 வயது சிறுவனான அஷ்வத் கௌஷிக் பிப்ரவரி 18ஆம் தேதியன்று பர்க்டோர்ஃபர்ஸ் ஸ்டேட்தோஸ் பொது விருதுப் போட்டியில் தோற்கடித்தார்.
கிராண்ட்மாஸ்டர் நிலையை அடைந்த ஒருவரைப் பண்டைய சதுரங்க ஆட்டத்தில் தோற்கடித்த ஆக இளையவர் எனும் பெருமை அஷ்வத்தைச் சேரும்.
போலந்து நாட்டைச் சேர்ந்த சதுரங்க ஆட்ட கிராண்டமாஸ்டரான 37 வயது யாசெக் ஸ்டோப்பாவை அஷ்வத் தோற்கடித்தார்.
இந்தப் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.
“முதல்முறையாக கிராண்ட்மாஸ்டர் நிலையில் இருக்கும் ஒருவரைத் தோற்கடித்திருப்பது, குறிப்பாகப் பண்டைய சதுரங்க ஆட்டத்தில் வெற்றி பெற்றிருப்பது அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது,” என்று இந்திய நாட்டவரான அஷ்வத் கூறினார்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அவர் தமது குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்தார்.
அனைத்துலகப் போட்டிகளில் அஷ்வத் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
இவர் நான்கு வயதிலிருந்து சுதுரங்கம் விளையாடி வருகிறார்.

