தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பூங்காவில் கோழியைக் கொன்றதாக ஆடவர்மீது சந்தேகம்

1 mins read
ac5dc969-2b5b-4fb4-a71c-7aac49aff9ef
பாசிர் ரிஸ் பூங்காவில் சுற்றிக்கொண்டிருந்த கோழி ஒன்றைக் ஆடவர் ஒருவர் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. கட்டுமானத் தளத்திற்கு அருகே இருந்த ஒரு மரத்திற்குப் பின்னால் அந்த ஆடவர் அமர்ந்து கோழியின் இறகுகளை அகற்றியதாகக் கூறப்படுகிறது. - படம்: ஃபேஸ்புக் 

பாசிர் ரிஸ் பூங்காவில் சுற்றிக்கொண்டிருந்த கோழி ஒன்றைக் ஆடவர் ஒருவர் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தின் தொடர்பில் தேசிய பூங்காக் கழகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.  ஃபேஸ்புக்கில் அந்த ஆடவர் கோழியைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் படங்கள் பகிரப்பட்டன.

அந்த ஆடவர், கட்டுமானத் தளத்திற்கு அருகே இருந்த ஒரு மரத்திற்குப் பின்னால் அமர்ந்து, அந்தக் கோழியின் இறகுகளை அகற்றியதாக பூங்காவில் தன் மகளுடன் இருந்த ஆடவர் ஒருவர் தெரிவித்தார்.

பூங்காக்கள், பொழுதுபோக்குக் கழக ஆணையரின் அனுமதியின்றி விலங்குகளைப் பிடிப்பதும் அவற்றை இடமாற்றுவதும் குற்றமாகும் என்று அதிகாரிகள் கூறினர்.

மேலும், பொதுப் பூங்காக்களில் விலங்குகளுக்குக் காயம் அல்லது மரணம் ஏற்படுத்தும் எந்தவொரு செயலிலும் ஈடுபடும் ஒருவருக்கு $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

பொது இடங்களில் உள்ள கோழிகளைச் சிலர் பிடிப்பது குறித்து ஆண்டுக்கு ஓரிரு புகார்கள் அளிக்கப்படுவதாக தேசிய பூங்காக்கள், விலங்கு நல ஆய்வு மற்றும் கல்வி மன்றத்தின் இணைத் தலைமை நிர்வாகி அன்பரசி பூபாலன் தெரிவித்தார்.

“சிங்கப்பூரில் பூங்காக்களிலும் பசுமை இடங்களிலும் கோழிகள் அதிகம் உள்ளன. அவற்றுக்குத் தீனி போடக்கூடாது என்பது குறித்தும் அவற்றைப் பிடிக்கக்கூடாது என்பது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம்,” என்றார் திருவாட்டி அன்பரசி.

குறிப்புச் சொற்கள்