அதிக விபத்துகளில் சிக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டிகள், முதிய பாதசாரிகள்

சாலை விபத்துகளில் உயிரிழப்பு அதிகரிப்பு: 2023ஆம் ஆண்டில் 136 பேர் மரணம்

சிங்கப்பூரில் விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கவலையளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது.

2023ஆம் ஆண்டில் நிகழ்ந்த போக்குவரத்து விபத்துகளில் 136 பேர் உயிரிழந்தனர். இது, 2022ல் 108 பேரை பலிவாங்கிய விபத்துகளுடன் ஒப்பிடுகையில் 25.9 விழுக்காடு அதிகம்.

2016ஆண்டிலிருந்து பார்த்தால் 136 பேர் உயிரிழந்தது இதுவரை இல்லாத ஆக உச்சமாகும்.

2016ல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 141 பேர் உயிரிழந்தனர்.

அண்மைய உயிரிழப்புகளின் எண்ணிக்கை, கொவிட்19க்கு முந்தைய 2019ஆம் ஆண்டின் எண்ணிக்கையான 118விட அதிகம் என்று போக்குவரத்து காவல்துறை பிப்ரவரி 20ஆம் வெளியிட்ட வருடாந்தர புள்ளிவிவர அறிக்கையில் தெரிவித்தது.

அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, சிவப்பு விளக்கை மீறி வாகனம் ஓட்டுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதையும் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டின.

பாதிக்கு மேற்பட்ட சாலை விபத்துகளில் மோட்டார்சைக்கிள் ஓட்டிகள் மற்றும் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து சென்றவர்களும் சிக்கியிருக்கின்றனர். இதற்கு அடுத்த நிலையில் இருபது விழுக்காட்டுடன் முதிய பாதசாரிகள் இருக்கின்றனர்.

செவ்வாய்க்கிழமை அன்று ஊடகங்களிடம் பேசிய போக்குவரத்து காவல்துறையின் தளபதி மற்றும் மூத்த உதவி ஆணையரான டேனியல் டான், கடந்த இரண்டு ஆண்டுகளில் சாலை விபத்துகளில் அதிகமானோர் உயிரிழந்தது எங்களுக்கு இயற்கையாகவே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது என்றார்.

இதில் மோட்டார்சைக்கிள் ஓட்டிகள், அவர்களது பின்னால் அமர்ந்து செல்பவர்கள், முதிய பாதசாரிகள் ஆகியோர் எளிதில் சாலை விபத்துகளில் சிக்குபவர்களாக இருக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் அமலாக்க முறைகளை போக்குவரத்து காவல்துறை மேம்படுத்தவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

அடுத்த காலாண்டிலிருந்து சிவப்பு விளக்கு கேமரா வேகக் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும். சாலை விதிகளை மதிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிக்கை எச்சரித்தது.

மோட்டார்சைக்கிள் ஓட்டிகள் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதும் விபத்துகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகும். வாகனத்தின் கட்டுப்பாட்டை அவர்களில் சிலர் இழந்து விடுகின்றனர். சிலர் கவனமின்றி தடங்களை மாறுகின்றனர். ஆனால் இது குறித்த மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

பல மோட்டார்சைக்கிள் ஓட்டிகள் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவதை புள்ளிவிவரங்கள் காட்டுவதாகவும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்தது.

இதனைச் சமாளிக்க சில போக்குவரத்து குற்றச்செயல்களுக்கான அபராதங்களையும் குற்றப்புள்ளிகளையும் அதிகரிக்க போக்குவரத்து காவல்துறை முடிவு செய்துள்ளது.

2023ல் வேகம் தொடர்பான மரணம் ஏற்படுத்திய சாலை விபத்துகள் 83.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2022ல் இத்தகைய 18 விபத்துகள் நடந்துள்ளன. 2023ல் இது 33க்கு கூடியது.

2023ல் இத்தகைய வேகம் தொடர்பான விபத்துகளில் 37 பேர் உயிரிழந்தனர். இது, 2022ல் வேக விபத்துகளிள் மரணமடைந்த 20 பேருடன் ஒப்பிடுகையில் 85 விழுக்காடு அதிகமாகும்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் சம்பவங்கள் 2022ல் 175லிருந்து 2023ல் 180ஆக சற்றுக் கூடியுள்ளது.

“சாலைகள் பாதுகாப்பாக இருப்பதற்கு நாம் அனைவரும் பங்காற்ற வேண்டும். அனைவரும் தங்களுக்கு உரிமையிருக்கிறது என்ற எண்ணத்தில் வாகனத்தை ஓட்டாமல் பொறுமையை கடைப் பிடிக்க வேண்டும்,” என்று மூத்த உதவி ஆணையர் டேனியல் டான் கேட்டுக் கொண்டார்.

2024ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் சாலைப் பயனீட்டாளர்கள் பொறுப்புடன் நடந்துகொள்வதை ஊக்குவிக்கும் சாலைப் பாதுகாப்பு இயக்கத்தை போக்குவரத்து காவல்துறை தொடங்குகிறது.

இந்த சாலை இயக்கம் அனைத்து சாலைப் பயனீட்டாளர்களையும் குறிப்பாக எளிதில் விபத்தில் சிக்குபவர்களை இலக்காகக் கொண்டிருக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!