மாதின் பானத்தில் மருந்தைக் கலந்த ஆடவர்

மாதின் பானத்தில் மருந்தைக் கலந்த ஆடவர்

1 mins read
438f89af-7032-40cb-a166-515c46df8616
குற்றம் நிரூபிக்கப்பட்டால் தென்கொரிய நாட்டவரான கிம் டோங் ஹுன்னுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் மற்றும் பிரம்படி விதிக்கப்படலாம். - படம்: இணையம்

ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள விளையாட்டு மையத்தில் பெண் ஒருவர் அருந்திய பானத்தில் ஆண் உறுப்பு விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கான மருந்தைக் கலந்ததாக ஆடவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்தப் பெண்ணுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவரது பானத்தில் அந்த மருந்தை தென்கொரிய நாட்டவரான 33 வயது கிம் டோங் ஹுன் கலந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி இரவு 7 மணிக்கும் 8 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ‘டடாலஃபில்’ எனும் மருந்தை அப்பெண்ணின் பானத்தில் கிம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த மருந்து குமட்டல், தலைவலி போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

சில சமயங்களில் தீடீரென்று பார்வை மற்றும் செவித்திறனை இழக்கும் அபாயம் உள்ளது.

ஆனால் அவ்வாறு ஒரு நிலை ஏற்படுவது அரிது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தைக் காக்க அவரது பெயர் வெளியிடப்படக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அரசாங்க வழக்கறிஞர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

மார்ச் 12ஆம் தேதியன்று கிம் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் கிம்முக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் மற்றும் பிரம்படி விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்