தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசாங்க நிதி உதவித் திட்டங்களைத் தவறாக பயன்படுத்திய பெண்ணுக்கு தண்டனை

1 mins read
bfab4ad6-539c-4f5b-84ca-3e105f562729
கொவிட்-19 கிருமித்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பைச் சமாளிக்க, அரசாங்க நிதி உதவித் திட்டங்களைப் பெண் ஒருவர் பல முறை தவறாக பயன்படுத்தியுள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

கொவிட்-19 கிருமித்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பைச் சமாளிக்க, அரசாங்க நிதி உதவித் திட்டங்களைப் பெண் ஒருவர் பல முறை தவறாக பயன்படுத்தியுள்ளார்.

நூர்காசீமா கரீம், 32, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சை ஏமாற்றி, மொத்தம் $3,800 பெற்றுக்கொண்டார்.

அவர் $2,600 மோசடி செய்த குற்றத்தையும் போலி ஆவணத்தை தயாரித்த குற்றத்தையும் ஒப்புக்கொண்டார்.

$1,200 ஏமாற்றிய குற்றத்தைத் தாண்டி மேலும் ஐந்து குற்றசாட்டுகள் தண்டனையின்போது கருத்தில் கொள்ளப்படும்.

கொவிட்-19 காரணமாக, தன் கணவர் வேலையை இழந்துவிட்டதாக பொய்த் தகவல் சொல்லி தற்காலிக நிவாரண நிதி மூலம் $500யை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, அவர் இரண்டு முறை வேலை செய்த நிறுவனத்தின் பெயரை வைத்து போலி ஆவணங்களைத் தயாரித்து $2100 பெற்றுக்கொண்டார்.

அவருடைய இக்குற்றங்கள், குறித்து காவல்துறைக்கு அக்டோபர் 15ஆம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது.

நூர்காசீமாவுக்குப், பிப்ரவரி 28ம் தேதி தண்டனை விதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்