தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விபத்தில் இரு நண்பர்கள் கொல்லப்பட்ட சம்பவம்; ஓட்டுநருக்கு சிறைத் தண்டனை

1 mins read
9fdb6bca-b38c-4f1a-ab58-54e46594f730
வேன் மரத்தில் மோதிய விபத்தில் இரு பயணிகள் தூக்கி எறியப்பட்டனர். - கோப்புப் படம்: ஷின் மின்

தன் நண்பர்களை வேனில் அழைத்துச் சென்ற ஓட்டுநர், அதன் கட்டுப்பாட்டை இழந்ததால் அந்த வேன் மரத்தின்மீது மோதியது. இதில் இரண்டு பயணிகள் தூக்கி எறியப்பட்டு உயிரிழந்தனர்.

விநியோகிப்பாளரும் ஓட்டுநருமான முஹமட் அஸ்-சியாயுடி செலாமட்டுக்கு திங்கட்கிழமை (19 பிப்ரவரி) 31 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தன் மீது சுமத்தப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார்.

கவனிப்பின்றி வாகனத்தை ஓட்டி மரணம் விளைவித்தது, கவனமில்லாமல் ஓட்டி காயம் விளைவித்தது உட்பட ஆறு குற்றச்சாட்டுகள் அவர் மீது கொண்டுவரப்பட்டன. விபத்துக்குப் பிறகு வீட்டில் திருடியதாக நான்கு குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டன.

சிங்கப்பூரரான அவருக்குச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், அனைத்து வாகனங்களையும் ஓட்ட எட்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்