சிங்கப்பூருக்கு வரும் சீனச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ளும் சீனச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தைக் காட்டிலும் இவ்வாண்டு ஜனவரி மாதம் 60 விழுக்காட்டுக்கும் மேல் அதிகம்.

சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் புதன்கிழமையன்று (21 பிப்ரவரி) வெளியிட்ட புள்ளி விவரங்களில் இந்த விவரம் தெரிய வந்தது.

இவ்வாண்டு ஜனவரி மாதம் 211,194 சீனச் சுற்றுப்பயணிகள் சிங்கப்பூருக்கு வந்தனர்.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 130,207ஆக இருந்தது.

இதன் விளைவாக சிங்கப்பூருக்குக் கடந்த ஜனவரி மாதம் வந்த அனைத்துலகச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 1,436,404ஆக பதிவானது.

சிங்கப்பூருக்கு வந்த வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, கொவிட்-19 நெருக்கடிநிலைக்குப் பிறகு இதுவே ஆக அதிகம்.

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான பரஸ்பர 30 நாள் விசா விலக்குத் திட்டம் பிப்ரவரி மாதம் நடப்புக்கு வருவதற்கு முன்பே சிங்கப்பூருக்கு வரும் சீன சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், சிங்கப்பூருக்கு ஆக அதிகமாக வரும் சுற்றுப்பயணிகள் பட்டியலில் இந்தோனீசியர்கள் முதலிடம் வகிக்கின்றனர்.

இவ்வாண்டு ஜனவரி மாதம் 268, 972 இந்தோனீசிய சுற்றுப்பயணிகள் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 244,343 ஆக இருந்தது.

ஒட்டுமொத்த அடிப்படையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தைவிட இவ்வாண்டு ஜனவரி மாதம் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 15.9 விழுக்காடு அதிகம்.

ஆண்டு அடிப்படையில் இந்த எண்ணிக்கை 54.2 விழுக்காடு ஏற்றம் கண்டது.

சிங்கப்பூருக்கு ஆக அதிகமாக வரும் சுற்றுப்பயணிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியர்கள் உள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 112,310 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணிகள் சிங்கப்பூருக்கு வந்தனர். இவ்வாண்டு ஜனவரி மாதம் இந்த எண்ணிக்கை 124,144ஆக அதிகரித்தது.

நான்காவது இடத்தில் மலேசியா உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 102,689 மலேசிய சுற்றுப்பயணிகள் சிங்கப்பூருக்கு வந்தனர். இந்த எண்ணிக்கை இவ்வாண்டு ஜனவரி மாதம் 93,387ஆகக் குறைந்தது.

பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இந்தியா உள்ளது. இவ்வாண்டு ஜனவரி மாதம் 82,117 இந்தியச் சுற்றுப்பயணிகள் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!