இரண்டு டன் இறைச்சியை விற்பனைக்காக சட்டவிரோதமாக இறக்குமதி செய்த ஆடவருக்கு அபராதம்

இரண்டு டன் இறைச்சியை விற்பனைக்காக சட்டவிரோதமாக இறக்குமதி செய்த ஆடவருக்கு அபராதம்

1 mins read
61fada36-64a6-4388-9d88-e0f6f1b60acf
புதன்கிழமையன்று பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி வகைகள். - படம்: சிங்கப்பூர் உணவு அமைப்பு

இறக்குமதி செய்யத் தகுந்த உரிமம் இல்லாது, தாய்லாந்திலிருந்து இறைச்சியை சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்த ஆடவருக்கும் பிப்ரவரி 21ஆம் தேதியன்று $30,000 அபராதம் விதிக்கப்பட்டது.

விற்பனைக்காக ஏறத்தாழ இரண்டு டன் இறைச்சியை இக்காச்சாய் யாசெங் சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்ததாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.

ஜனவரி 5ஆம் தேதியன்று ஜூ செங் சாலையில் உள்ள திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் இருந்த மலேசிய லாரியை அமைப்பின் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அதில் பன்றி இறைச்சி, கோழி இறைச்சி உட்பட பெரும் அளவிலான மாமிச வகைகள் இருந்தன.

அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்