அலிபாபா குழுமத்தின் இணை நிறுவனர் ஜாக் மா. அவருடைய மனைவி, தஞ்சோங் பகார் பகுதியில் உள்ள டக்ஸ்டன் ரோட்டில் அருகருகே இருக்கும் மூன்று கடைவீடுகளை வாங்கியுள்ளார்.
சிங்கப்பூரான ஜாங் யிங், டக்ஸ்டன் ரோட்டில் இருக்கும் 70, 71,72 ஆகிய எண்களைக் கொண்ட கடைவீடுகளைக் கிட்டத்தட்ட $45 மில்லியனுக்கும் $50 மில்லியனுக்கும் இடைப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி வாங்கியதாக ‘பிசினஸ் டைம்ஸ்’ தெரிவித்தது. வர்த்தக வட்டாரத்திற்கு உட்பட்டதாக பரிந்துரைக்கப்பட்ட இக்கட்டடங்கள் 99 வருட குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.
மூன்று கடைவீடுகளுக்கு திருவாட்டி ஜாங் செலுத்தியதாகக் கூறப்படும் விலையானது ஒரு சதுர அடிக்கு $4,200 முதல் S$4,600 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

