நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகளுக்கான தேவை அதிகரிப்பு

பராமரிப்புப் பொறுப்புகளைக் கூடுதல் சிங்கப்பூரர்கள் ஏற்பதால் நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகளுக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாக மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் பிப்ரவரி 20ஆம் தேதியன்று தெரிவித்தார்.

இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படும்.

நீக்குப்போக்குள்ள வேலைச் சூழலுக்கு கோரிக்கை விடுக்கவும் வர்த்தகத் தேவைகளுக்கு ஏற்ப இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற முதலாளிகளை ஊக்குவிக்கவும் இந்த வழிகாட்டி நெறிமுறைகள் உதவும்.

இதுகுறித்த கலந்துரையாடல்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து நடந்து வருகின்றன.

“சிங்கப்பூர், மூப்படையும் மக்கள்தொகையைக் கொண்ட நாடு. ஏதேனும் ஒரு கட்டத்தில் நம்மில் பலர் பராமரிப்புப் பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழல் ஏற்படும்.

“எனவே, குடும்பப் பொறுப்புகளைக் கவனித்துக்கொண்டு, அதே வேளையில் வேலை செய்ய விரும்புவோருக்கு ஏற்புடைய சூழலை உருவாக்குவது நமது கடமை,” என்று நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடு கோரிக்கைகள் தொடர்பான முத்தரப்புப் பங்காளித்துவ வழிகாட்டி நெறிமுறைகளுக்கான கலந்துரையாடலில் திருவாட்டி கான் கூறினார்.

நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வழிகாட்டி நெறிமுறைகளை மேம்படுத்த பணிக்குழு ஒன்று கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.

பணிக்குழுவில் அரசாங்கம், தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி), சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம், பல்வேறு நிபுணத்துவ அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர்.

“நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகளால் பராமரிப்பாளர்கள் அதிகம் பலன் அடைவர் என நம்புகிறோம். அதே சமயம் நீக்குப்போக்குள்ள வேலைச் சூழல் மற்றும் பல்வேறு வேலை ஏற்பாடுகளுக்காக இளையர்கள் ஆவுலடன் காத்திருப்பதும் எங்களுக்குத் தெரியும். படித்துக்கொண்டே வேலை செய்வது குறித்து அவர்கள் பரிசீலினை செய்பவர்களாக இருக்கக்கூடும். எனவே, நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகள் பராமரிப்பாளர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பலன் அளிக்கும் என நம்புகிறோம்,” என்று என்டியுசி உதவி தலைமைச் செயலாளர் யோ வான் லிங் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!