தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

1 mins read
dce10be2-389a-4b5f-bd2a-9c23dd784825
மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. - படங்கள்: சிங்கப்பூர் ரோடு எக்சிடென்ட்ஸ் மற்றும் சிங்கப்பூர் இன்சிடென்ட்ஸ் ஃபேஸ்புக்

சிலேத்தார் விரைவுச்சாலையில் பிப்ரவரி 21ஆம் தேதி நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் மாண்டார்.

கனரக வாகனமும் காரும் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டது.

மத்திய விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலையில், உட்லண்ட்ஸ் அவென்யூ 12 நுழைவாயிலுக்கு முன்பு விபத்து நிகழ்ந்ததாக பிப்ரவரி 21ஆம் தேதி மாலை 6.20 மணி அளவில் தகவல் கிடைத்தது என்று காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.

மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

விபத்துக்குள்ளான கனரக வாகனத்துக்குப் பக்கத்தில் நீல நிற கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்ததை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி காட்டியது.

அதற்குள் மாண்ட மோட்டார் சைக்கிளோட்டியின் உடல் இருந்ததாக நம்பப்படுகிறது.

விபத்து காரணமாக சாலையின் ஆக வலது இரண்டு தடங்களை மற்ற வாகனங்கள் பயன்படுத்த முடியாமல் போனது.

இதனால் அங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்துகிறது.

2023ஆம் ஆண்டில் சாலை விபத்து காரணமாக 136 பேர் மாண்டனர்.

2022ஆம் ஆண்டில் பதிவான எண்ணிக்கையைவிட இது 25.9 விழுக்காடு அதிகம்.

மாண்டோரில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் மோட்டார் சைக்கிளோட்டி அல்லது மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்பவர்கள்.

மாண்டோரின் ஏறத்தாழ 20 விழுக்காட்டினர் முதிய பாதசாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
விபத்து