பல பெரிய நிறுவனங்களை ஈர்த்துள்ள சிங்கப்பூர்

1 mins read
e97d0b99-1c4d-4515-bc2a-6b22bf2f7554
2023ஆம் ஆண்டு நிலவரப்படி சிங்கப்பூரில் 4,200 நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் உள்ளன. - படம்: புளும்பெர்க்

ஆசியாவில் தலைமை அலுவலகத்தை திறக்க பல பெரிய நிறுவனங்கள் சிங்கப்பூரையே அணுகுவதாக புளும்பெர்க் தகவல் வெளியிட்டுள்ளது.

வர்த்தகத்திற்கு சிறந்த இடமாக இருக்கும் பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

2023ஆம் ஆண்டு நிலவரப்படி சிங்கப்பூரில் 4,200 நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் உள்ளன. சிங்கப்பூருக்கு அதிக போட்டி தரும் ஹாங்காங்கில் 1,336 நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் உள்ளதாக புளும்பெர்க் குறிப்பிட்டது.

கூகள், மைக்ரோசாஃப்ட், ரோல்ஸ் ராய்ஸ், டிக்டாக் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் சிங்கப்பூரில் உள்ளன.

அரசியல் ரீதியான பிரச்சினைகளை தவிர்க்க பல சீன நிறுவனங்கள் சிங்கப்பூரைத் தேர்வு செய்வதாகவும் புளும்பெர்க் கூறியது.

மேலும் சிங்கப்பூரில் உள்ள சிறந்த மனித வளம், பன்முக பொருளியல் சூழல், வரிச் சலுகை, நிலையான அரசியல் போன்றவையும் நிறுவனங்களை ஈர்ப்பதாக அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்