போயிங் 737 மேக்ஸ் பிரிவுக்கு புதிய தலைவர்

போயிங் 737 மேக்ஸ் பிரிவுக்கு புதிய தலைவர்

1 mins read
59afab23-1f44-4b3a-9969-e297d4a9fa2c
அண்மையில் அலாஸ்கா ஏர்லைன்சின் போயிங் விமானம் ஒன்று புறப்பட்ட கொஞ்ச நேரத்தில் அதன் கதவுகளில் ஒன்று நடுவானில் பெயர்ந்து விழுந்ததால் விமானம் அவசரமாகத் தரையிறங்க வேண்டியிருந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் பிரிவின் தலைவர் எட் கிளார்க் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் 737 மேக்ஸ் பிரிவில் வேலை செய்தவர் கிளார்க்.

கடந்த ஜனவரி மாதம் அண்மையில் அலாஸ்கா ஏர்லைன்சின் போயிங் விமானம் ஒன்று புறப்பட்ட கொஞ்ச நேரத்தில் அதன் கதவுகளில் ஒன்று நடுவானில் பெயர்ந்து விழுந்ததால் விமானம் அவசரமாகத் தரையிறங்க வேண்டியிருந்தது.

அதன்பின்னர் அமெரிக்க அதிகாரிகள் 737 மேக்ஸ் விமானங்களை தரத்தை ஆய்வு செய்தனர். அதில் சில விமானங்களின் பாகங்கள் இறுக்கமாக இல்லாமல் ஆட்டம் கண்டிருந்தன.

அதைத்தொடர்ந்து பாதுகாப்பு காரணங்கள் கருதி 737 மேக்சின் 171 விமானங்கள் பறக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இதனால் போயிங் நிறுவனத்திற்கு அதிக நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில் 737 மேக்ஸ் பிரிவுக்கு புதிய தலைவராக கேட்டி ரிங்கோல்ட் பொறுப்பேற்கவுள்ளார்.

விமானத்தின் தரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்தப் பிரிவிலும் போயிங் நிறுவனம் தலைமைத்துவ மாற்றங்களை செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்