சிங்கப்பூர், சவூதி அரேபியாவுக்கு இடையே கூடுதல் விமானச் சேவைகள்

சிங்கப்பூர், சவூதி அரேபியாவுக்கு இடையே கூடுதல் விமானச் சேவைகள்

1 mins read
3c7a31de-f433-4e72-8eeb-4403d36718e7
பிப்ரவரி 19ஆம் தேதி நடப்புக்கு வந்த மேம்படுத்தப்பட்ட ஆகாயச் சேவை உடன்பாட்டின்கீழ் விமானச் சேவைகள் இயக்கப்படும். - படம்: சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரையும் சவூதி அரேபியாவையும் சேர்ந்த விமான நிறுவனங்கள், இரு நாடுகளுக்கு இடையே கூடுதலான விமானச் சேவைகளை இயக்க அனுமதிக்கப்படும்.

பிப்ரவரி 19ஆம் தேதி நடப்புக்கு வந்த மேம்படுத்தப்பட்ட ஆகாயச் சேவை உடன்பாட்டின்கீழ் அந்த விமானச் சேவைகள் இயக்கப்படும்.

இந்த உடன்பாட்டின்கீழ் கூடுதலாக எத்தனை விமானச் சேவைகள் அனுமதிக்கப்படும் என்பது குறித்த விவரங்களை சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிடவில்லை.

சிங்கப்பூருக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையேயான ஆகாயச் சேவை உடன்பாடு 1990ல் முதன்முறையாக கையெழுத்திடப்பட்டது. அது புதுப்பிக்கப்படுவது இது ஐந்தாவது முறை.

குறிப்புச் சொற்கள்
விமானச் சேவை