தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இடுகாட்டில் ‘பேய்கள் ஜாக்கிரதை’ எச்சரிக்கை: தேசிய சுற்றுப்புற வாரியம் விளக்கம்

1 mins read
088f3200-9467-465b-a288-d1dfc9adc194
புக்கிட் பிரவுன் இடுகாட்டில் காணப்பட்ட எச்சரிக்கைப் பலகை. - படம்: ஃபேஸ்புக்

சிங்கப்பூரிலுள்ள இடுகாட்டு ஒன்றின் எச்சரிக்கைப் பலகை அண்மையில் இணையவாசிகள் கவனத்தை ஈர்த்ததுடன் அவர்கள் மனதில் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

பேய்களைப் பார்க்கக்கூடும் என்று அந்தப் பலகையில் புதிய எச்சரிக்கை ஒன்று சேர்க்கப்பட்டிருந்தது.

மரங்கள் விழுவது, பாம்புகள் இருப்பது என வெவ்வேறு அபாயங்களைச் சுட்டும் அந்த எச்சரிக்கைப் பலகையில் மூன்று பேய் உருவங்கள் போன்று வரையப்பட்ட ஒட்டுப்படமும் இடம்பெற்றிருந்தது.

இதையடுத்து, அந்த எச்சரிக்கைப் பலகை தன்னுடையதுதான் என்று உறுதியளித்த தேசிய சுற்றுப்புற வாரியம், பேய்கள் குறித்து எச்சரிக்கை விடுத்தது நாசக்காரர்கள் செய்த குறும்பு என்று விளக்கமளித்துள்ளது.

1973ஆம் ஆண்டில் புக்கிட் பிரவுன் இடுகாடு அதிகாரபூர்வமாக மூடப்பட்டது. அதில் இந்தச் சேதப்படுத்தப்பட்ட எச்சரிக்கைப் பலகை இருப்பதாக பிப்ரவரி 18ஆம் தேதியன்று ஃபேஸ்புக் தளத்தில் முதன்முதலாக பதிவிடப்பட்டது.

இதையறிந்த வாரியம் மறுநாளே இடுகாட்டில் சோதனைகள் மேற்கொண்டு வேறு பல எச்சரிக்கைப் பலகைகளிலும் இதேபோன்ற ஒட்டுப்படம் இருந்ததைக் கண்டறிந்தது.

இந்நிலையில், அனைத்து ஒட்டுப்படங்களும் அகற்றப்பட்டுவிட்டதாக வாரியம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்