சாங்கி கண்காட்சி மையத்தில் நடைபெறும் சிங்கப்பூர் விமானக் காட்சியின் முதல் சில நாள்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து பிப்ரவரி 24, 25ஆம் தேதிகளில் நடைபெறும் இந்தக் கண்காட்சியை காணச் செல்வோர் அதற்கென சாங்கி கண்காட்சி மையத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்ல ஒதுக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட 100 பேருந்துகளைப் பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.
இதுபற்றிக் கூறிய எக்ஸ்பீரியா இவென்ட்ஸ் அமைப்பின் நிர்வாக இயக்குநர் லெக் செட் லாம், “நாங்கள் தரும் தகவல் என்னவென்றால், தயவுசெய்து இதற்கென ஒதுக்கப்பட்டுள்ள பேருந்துகளை பயன்படுத்துங்கள். அது வார இறுதியில் விமானக் காட்சியை காண வருவோருக்கு மகிழ்வான அனுபவமாக அமையும்,” என்று கூறினார்.
சிங்கப்பூர் எக்ஸ்போவிலிருந்து கண்காட்சி மையத்திற்கு செல்லும் பேருந்து கண்காட்சி குறித்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல் 15 நிமிடத்திற்கு ஒருமுறை வராது. மாறாக, ஒவ்வொரு ஐந்திலிருந்து எட்டு நிமிடங்களுக்குள் பேருந்து வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.