உடற்குறை உள்ளவர்களுக்கு உதவும் கடைத்தொகுதிகள்

உடற்குறை உள்ளவர்களுக்கு உதவும் கடைத்தொகுதிகள்

2 mins read
f4bdaa56-e730-4f3b-a7eb-34321f7cbcd6
2024ஆம் ஆண்டு இறுதிக்குள் ஃபிரேசர்ஸ் பிராப்பர்ட்டி சொத்து நிறுவனம் அதன் கீழ் செயல்படும் 12 கடைத்தொகுதிகளில் 70க்கும் மேற்பட்ட கடைகள் ‘கால்ம் ஹவர்ஸ்’ திட்டத்தை பின்பற்றவுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உடற்குறை உள்ளவர்கள் கடைத்தொகுதிகளுக்கு சென்று பொருள்களை வாங்க ஊக்குவிக்கும் விதமாக சில கடைத்தொகுதிகளும் கடைகளும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர்.

உடற்குறை உள்ளவர்கள் பாதுகாப்பாகவும் அவர்களுக்கு தேவையான பொருள்களை எளிதாக வாங்கவும் சில கடைத்தொகுதிகள் ஊழியர்களுக்குச் சிறப்பு பயிற்சி வழங்கியுள்ளன.

இவ்வாறு செய்வதன் மூலம் உடற்குறை உள்ளவர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும் கடைத்தொகுதிகளுக்குத் தொடர்ந்து வர விரும்பக்கூடும்.

நார்த்பாயிண்ட் சிட்டி, தியோங் பாரு பிளாசா உள்ளிட்ட சில கடைத்தொகுதிகள் அமைதியான சூழலை கொண்டவை. அங்குள்ள சில கடைகளில் வெளிச்சம் குறைவாக வைத்து உடற்குறை உள்ளவர்களுக்கு உகந்த இடமாக அடையாளப்படுத்தப்படும்.

மேலும் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் கடைத்தொகுதி திறந்த முதல் 60 நிமிடங்கள் உடற்குறை உள்ளவர்களுக்கு ஏதுவாக இருக்க கடைகள் தங்களைத் தயார்படுத்திக் கொள்வார்கள். இது ‘கால்ம் ஹவர்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது.

2024ஆம் ஆண்டு இறுதிக்குள் ஃபிரேசர்ஸ் பிராப்பர்ட்டி சொத்து நிறுவனம் அதன் கீழ் செயல்படும் 12 கடைத்தொகுதிகளில் 70க்கும் மேற்பட்ட கடைகள் ‘கால்ம் ஹவர்ஸ்’ திட்டத்தை பின்பற்றவுள்ளன.

‘கால்ம் ஹவர்ஸ்’ தொடர்பான அறிவிப்புகளும் ஆங்காங்கே கடைத்தொகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

“சமூகத்தை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகளில் கடைத்தொகுதிகளுக்கும் ஓர் இடம் உண்டு. பல தரப்பட்ட மக்கள் கடைத்தொகுதிகளுக்கு வந்து செல்வார்கள். அவர்களுக்கு சிறந்த அனுபவத்தை தந்து அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாக திகழ இந்த புது திட்டம் உதவும்,” என்றார் ஃபிரேசர்ஸ் பிராப்பர்ட்டி சொத்து நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சூன் சு லின்.

கடந்த ஆண்டு மே மாதம் ஃபிரேசர்ஸ் பிராப்பர்ட்டி சொத்து நிறுவனம் அதன் கடைத்தொகுதியில் உள்ள ஊழியர்களுக்கும், வாடகைதாரர்களுக்கும் உடற்குறை உள்ளவர்களுக்கு உதவும் விதமாக சில பயிற்சிகளை வழங்கியது.

மறதி நோய், தொடர்புத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு எப்படி உதவலாம் போன்ற பயிற்சிகளும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. இதுவரை 120 ஊழியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டதாக ஃபிரேசர்ஸ் பிராப்பர்ட்டி சொத்து நிறுவனம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்