மின்னிலக்கச் சேவை: சுங்க வரி விலக்கு இல்லை எனில் கட்டணம் செலுத்த வேண்டும்

மின்னிலக்கச் சேவை: சுங்க வரி விலக்கு இல்லை எனில் கட்டணம் செலுத்த வேண்டும்

1 mins read
6efa618e-0c94-456b-a441-14e488cbfb93
13வது முறையாக நடத்தப்படும் அமைச்சர்கள் நிலை மாநாட்டில் அனைத்துலக மின்னிலக்கச் சேவைக்கான வரி விலக்கு குறித்து கலந்துரையாடப்பட்டு முடிவெடுக்கப்படும். - படம்: தி பிஸ்னஸ் டைம்ஸ்

கடந்த 26 ஆண்டுகளாக நடப்பில் இருந்துவரும் அனைத்துலக மின்னிலக்கச் சேவைகளுக்கான சுங்க வரி விலக்கை உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்கள் இவ்வாரம் புதுப்பிக்கத் தவறினால் அந்த ஒப்பந்தம் மார்ச் மாதம் காலாவதியாகிவிடக்கூடும்.

அவ்வாறு நேர்ந்தால் மின்னிலக்கச் சேவைகளுக்கு சிங்கப்பூர் நிறுவனங்களும் பயனீட்டாளர்களும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் அமைச்சர்கள் நிலை மாநாட்டில் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்கள் இவ்வாரம் எடுக்கும் முடிவு, வர்த்தகத்தை அதிகம் நம்பியிருக்கும் சிங்கப்பூருக்கு மிகவும் முக்கியம்.

13வது முறையாக நடத்தப்படும் இந்த மாநாடு பிப்ரவரி 26ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதி வரை அபு தாபியில் நடைபெறுகிறது.

அதில் உலக வர்த்தக அமைப்பின் 164 உறுப்பினர்கள் கலந்துகொண்டு முத்திய வர்த்தக விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவர்.

உலக வர்த்தக அமைப்பின்கீழ் வழங்கப்படும் வெளிப்படையான, விதிமுறைகள் சார்ந்த பலதரப்பு வர்த்தக முறையை சிங்கப்பூர் ஆதரிக்கிறது.

மாநாட்டில் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கிறார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்