சிங்கப்பூர் உற்பத்தித் துறை 1.1% வளர்ச்சி

சிங்கப்பூரின் உற்பத்தித் துறை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 1.1 விழுக்காடு வளர்ச்சிகண்டது.

உற்பத்தித் துறை 3.7 விழுக்காடு அதிகரிக்கும் என்று முன்னதாக நிபுணர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

உயிர் மருத்துவ உற்பத்தித் துறையை தவிர்த்து, உற்பத்தித் துறை 5.4 விழுக்காடு விரிவடைந்தது. டிசம்பரில் ஏற்பட்ட 2.5 விழுக்காட்டுச் சுருக்கம், 2.4 விழுக்காட்டுக்கு கீழ்நோக்கித் திருத்தப்பட்டதாக பொருளியல் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டின.

மின்னணுத் தொழில்துறையில், தகவல்தொடர்பு, பயனீட்டாளர் மின்னணுத் துறை மட்டுமே விரிவடைந்தது. அது 23.8 விழுக்காடு அதிகரிப்பைக் கண்டது.

இதற்கிடையே, பகுதி மின்கடத்தித் துறை 3.4 விழுக்காடு சரிந்தது. சிங்கப்பூரின் மொத்த உற்பத்தித் தயாரிப்பில் 45 விழுக்காடு மின்னணுத் துறையிலிருந்து வருகின்றன.

உற்பத்தித் துறையில் ஏற்பட்ட சரிவுக்கு உயிர் மருத்துவத் துறையும் ஒரு காரணம். ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் உயிர் மருத்துவத் துறை 25.9 விழுக்காடு குறைந்தது.

இந்நிலையில், போக்குவரத்து பொறியியல் துறை 43.5 விழுக்காடு கூடியது. வான்வெளி துறையில் ஏற்பட்ட 69.1 விழுக்காடு வளர்ச்சி அதற்கு ஒரு காரணம்.

துல்லியப் பொறியியல் துறையிலும் உற்பத்தி 27.7 விழுக்காடு விரிவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!