தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விற்பனைக்கு வரும் மவுண்ட்பேட்டன் பழைமைப் பாதுகாப்பு பங்களா

2 mins read
$54.5 மில்லியன் விலையில்
2dc472d4-8a6b-4c14-9b52-4c2331f79912
லீ சூன் குவான் குடும்ப பங்களா வீடு. - படம்: நைட் ஃபிராங்க்

மவுண்ட்பேட்டன் ரோடில் கிட்டத்தட்ட நூற்றாண்டு காலமாக ஒரே குடும்பச் சொத்தாக இருந்த பழைமைப் பாதுகாப்பு பங்களா வீடு ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது.

இதன் வழிகாட்டி விற்பனை விலை $54.5 மில்லியன் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பங்களா வீடு எந்த வில்லங்கமும் இல்லாத பாரம்பரிய சொத்து. இதை லீ சூன் குவான் குடும்பத்தார் கடந்த 1926ஆம் ஆண்டு வாங்கினர்.

திரு லீ சூன் குவான் சைனிஸ் கமர்ஷியல் வங்கியை 1912ஆம் ஆண்டில் நிறுவினார். அந்த வங்கி பின்னர் 1932ஆம் ஆண்டு ஹோ ஹோங் வங்கியுடனும் ஓவர்சீஸ் வங்கியுடனும் இணைந்து ஓசிபிசி வங்கியாக புது வடிவம் பெற்றது. திரு லீ 1924ஆம் ஆண்டு காலமானார்.

“சிங்கப்பூரிலுள்ள உள்ள கிட்டத்தட்ட 85 பழைமை பாதுகாப்பு பங்களாக்களில் 15 மவுண்ட்பேட்டன் சாலையில் உள்ளன. அவற்றில் இதுவும் ஒன்று,” என்று இந்த பங்களாவை விற்கும் பணியை ஏற்றுள்ள நைட் ஃபிராங்க் சொத்து சந்தை நிறுவனம் விளக்கியது.

இந்த இரண்டு மாடி பங்களா வீட்டின் நிலப்பரப்பு 2,977.7 சதுர மீட்டராகும். அத்துடன் இது சம வடிவிலான, வரிசைக் கடைசியில் உள்ள நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த பங்களா வீடு ஏழு படுக்கை அறைகள், ஒரு குடும்ப ஒன்றுகூடல் அறை, ஒரு கூடம், உணவு உண்ணும் இடம், பணியாளர்கள் தங்கும் விடுதி மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை கொண்டது. மேலும், இங்கு வெளிப்புறத் தோட்டம், பூந்தோட்டம், மீன் குளம் ஆகியவையும் உள்ளன.

இந்த வீட்டை வாங்குவோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒப்புதலுடன் வீட்டை மேலும் விரிவுபடுத்திக் கொள்ளலாம் என்றும் நைட் ஃபிராங்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்