தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வங்கிக் கணக்குகளை ‘பூட்டி வைக்கும்’ திட்டத்தில் $5.4பி. ஒதுக்கிவைப்பு

1 mins read
9e798197-0293-43b2-a404-a6992e6e3b2f
படம். - தமிழ் முரசு

பிப்ரவரி மாதம் தொடங்கி வங்கிகளின் வங்கிக் கணக்குகளை ‘பூட்டி வைக்கும்’ திட்டத்தில் 61,000க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் உள்ள $5.4 பில்லியனுக்கும் மேற்பட்ட பணம் பாதுகாப்பாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது என்று வியாழக்கிழமை (பிப்ரவரி 29) அன்று வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்தார்.

மோசடிச் சம்பவங்களுக்கு எதிராக கடந்த நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தின்படி, வங்கி வாடிக்கையாளர்கள் மின்னிலக்க செயலி வசதி மூலம் தாங்கள் சேமித்து வைத்துள்ள பணத்தை வேறொருவருக்கு மாற்ற முடியாதபடி அதைப் பாதுகாக்கலாம்.

இதை வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி செயலி மூலமோ அல்லது இணைய வங்கிச் சேவை மூலமோ தங்கள் பணத்தை பூட்டி வைக்கலாம். இந்தப் பணத்தை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வேண்டுமெனில் அவர்கள் வங்கிக் கிளைகளுக்கு நேரடியாகச் செல்வதன் மூலமோ அல்லது தானியங்கி வங்கி இயந்திரங்களின் மூலமோதான் செய்ய முடியும்.

இது குறித்து நடாளுமன்றத்தில் உரையாற்றிய திரு டான், முக்கிய வங்கிகள் இந்த வசதியை இவ்வாண்டு மத்தியில் நடைமுறைப்படுத்தும் என்று கூறினார்.

இந்தத் திட்டம் அறிமுகம் கண்டதிலிருந்து உள்ளூர் வங்கிகள் தங்கள் வங்கிக் கணக்குகளைப் பூட்டி வைக்கும் திட்டத்தைச் சரிசெய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்