டெய்லர் சுவிஃப்ட் இசை நிகழ்ச்சி நுழைவுச்சீட்டு மோசடி: $213,000 இழப்பு

புகழ்பெற்ற அமெரிக்கப் பாடகி டெய்லர் சுவிஃப்ட்டின் இசை நிகழ்ச்சி தொடர்பான நுழைவுச்சீட்டு மோசடியில் இவ்வாண்டு ஜனவரி மாதத்திற்கும் பிப்ரவரி மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் குறைந்தது 334 பேர் $213,000க்கும் அதிகமான தொகையைப் பறிகொடுத்தனர்.

மார்ச் 2 ஆம் தேதி சிங்கப்பூரில் நடக்கவுள்ள டெய்லர் சுவிஃப்ட் இசை நிகழ்ச்சியைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அவர்களின் ஆர்வத்தை மோசடிக்காரர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இணையத் தளங்களில் இசை நிகழ்ச்சிகள் தொடர்பான நுழைவுச் சீட்டு மோசடிகளின் ஆபத்தான போக்கை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் காவல்துறை மார்ச் 1ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், “கெரோசல், ஃபேஸ்புக், டெலிகிராம், டுவிட்டர், சியாவ்ஹொங்ஷு போன்ற தளங்களில் மோசடிக்காரர்கள் இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டு குறித்த விளம்பரங்களைப் பதிவிடுவர்.

“அந்த விளம்பரத்தை நம்பி அதைப் பெற விரும்பும் ரசிகர்களை வாட்ஸ் அப், டெலிகிராம், விசாட் போன்ற தகவல் செயலிவழியில் தொடர்புகொள்வர். அதில், மோசடியான பரிவர்த்தனைகளை இறுதி செய்வர்.

“பாதிக்கப்பட்டவர்கள் நுழைவுச்சீட்டுக்கான பணத்தை பேநவ், வங்கி செயலிகளின் மூலமும் மூலமும் மெய்நிகர் கடன் வழங்கும் ஐகார்ட்ஸ் வழியாகவும் அனுப்புவர்.

“நுழைவுச் சீட்டுக் கிடைக்கப் பெறாதபோதும் விற்பனையாளரை அணுக முடியாத போதும் இசை நிகழ்ச்சிக்குப் போலியான நுழைவுச்சீட்டுடன் செல்வோர் அனுமதிக்கப்படாதபோதும் தான் உண்மை நிலவரத்தை பாதிக்கப்பட்டவர்கள் உணர்வர்,” என்று காவல்துறை குறிப்பிட்டது.

இணையத்தில் இசை நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச் சீட்டுகளை வாங்கும்போது விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!