தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2025ல் புக்கிட் பாத்தோக் வெஸ்டில் புதிய உணவங்காடி நிலையம்

1 mins read
305cacc7-af84-49bf-8dc0-9cdf6d632694
2024 ஆம் ஆண்டின் இறுதியில் புக்கிட் பாத்தோக் வெஸ்ட் உணவங்காடி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் எனக் கூறப்பட்டது. - படம்: ஏமி கோர்/ ஃபேஸ்புக்

புக்கிட் பாத்தோக் வெஸ்டில் 2025ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஒரு புதிய உணவங்காடி நிலையம் திறக்கப்படும்.

நல்லிணக்க கிராமம் @ புக்கிட் பாத்தோக்கின் தரைத்தளத்தில் புக்கிட் பாத்தோக் வெஸ்ட் உணவங்காடி நிலையம் செயல்படும் என நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் தனது ஃபேஸ்புக் பதிவில் மார்ச் 1ஆம் தேதி தெரிவித்தார்.

அந்த உணவங்காடி நிலையத்தில் 22 சமைத்த உணவுக் கடைகளும் கிட்டத்தட்ட 90 மேசைகளும் இருக்கும் என்று ஹொங் கா தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான  டாக்டர் ஏமி தனது பதிவில் மேலும் குறிப்பிட்டார்.

ஒரே நேரத்தில் 400க்கும் மேற்பட்டோர் அமர்ந்து உணவு உண்ணும் வகையில் அந்த நிலையம் கட்டப்படும் என அவர் கூறினார்.

2024 ஆம் ஆண்டின் இறுதியில் அந்த உணவங்காடி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் எனக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்