பங்கோலியை விற்ற ஆகாயப்படை வீரருக்கு நன்னடத்தைக் கண்காணிப்பு

பங்கோலியை விற்ற ஆகாயப்படை வீரருக்கு நன்னடத்தைக் கண்காணிப்பு

1 mins read
88610948-737e-47aa-9e2f-8716dd7a9d13
21 வயதான டேமியன் டான் குவான் ரோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பூங்கா இணைப்புப் பாதையில் தான் கண்டுபிடித்த அரிய விலங்கான ‘பங்கோலின்’ எனப்படும் ஒருவகை எறும்புண்ணியை விற்பனைச் செய்த சிங்கப்பூர் ஆகாயப்படை வீரரான டேமியன் டான் குவான் ரோங் என்பவருக்கு வியாழக்கிழமை (பிப்ரவரி 29ஆம் தேதி) ஓராண்டு நன்னடத்தைக் கண்காணிப்பு தண்டனையாக விதிக்கப்பட்டது.

ஆகாயப்படையில் தொழில்நுட்பராகப் பணிபுரியும் 21 வயதான டேமியன் தினமும் இரவு 11 மணியிலிருந்து காலை 6 மணி வரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பணி நிமித்தமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காலம் மாறுபட வேண்டுமெனில், டேமியன் தனது பணியிட மேற்பார்வையாளர்களிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

கூடுதலாக, டேமியனுக்கு விதிக்கப்பட்ட நன்னடத்தைக் கண்காணிப்பின் ஒரு பகுதியாக 80 மணிநேரம் சமூக சேவை செய்ய வேண்டும்.

தன்மீது சுமத்தப்பட்ட பாதுகாக்க வேண்டிய வனவிலங்கை அனுமதியின்றி விற்பனை செய்த குற்றச்சாட்டை டேமியன் கடந்த ஜனவரி மாதம் ஒப்புக்கொண்டார்.

விலங்குகள் மற்றும் பறவைகள் சட்டம், வனவிலங்குச் சட்டம் ஆகிய சட்டங்களின்படி டேமியன் மீது சுமத்தப்பட்ட வேறு மூன்று குற்றச்சாட்டுகளும் தண்டனை வழங்கும்போது கருத்தில் கொள்ளப்பட்டன.

குறிப்புச் சொற்கள்