பாலியல் குற்றச்சாட்டு; ஜப்பானியமேயர் கண்ணீருடன் பதவி துறப்பு

பாலியல் குற்றச்சாட்டு; ஜப்பானியமேயர் கண்ணீருடன் பதவி துறப்பு

1 mins read
7e12ce9c-2085-420e-bfb1-d8358270898b
கண்ணீர்விட்ட ஜினான் மேயர் ஹிடியோ கொஜிமா. - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ஏறக்குறைய 99க்கும் மேற்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் ஜப்பானிய மேயர் ஒருவர், செய்தியாளர் கூட்டத்தில் சில சம்பவங்களை மறுத்து அழுத பிறகு சமூக ஊடகங்களில் பலர் வெகுண்டு எழுந்துள்ளனர். பிப்ரவரி 29ஆம் தேதியன்று பதவி விலகப் போவதாக 74 வயது மேயர் அறிவித்திருந்தார்.

மறுநாள் செய்தியாளர் சந்திப்பில் கண்ணீர்விட்ட அவர், தனது சகோதரர் தன்னை திட்டுவதாகவும் தெரிவித்தார். சாட்சியாளர்கள் பலர் பார்த்தாகக் கூறப்படும் ஒரு பெண் ஊழியரை மேயர் கட்டியணைத்ததாகக் கூறப்படும் விவகாரம் உட்பட சுயேச்சை குழு தயாரித்துள்ள பாலியல் குற்றச்சாட்டு பட்டியலில் உள்ள சிலவற்றை அவர் ஏற்க மறுத்தார்.

தொலைக்காட்சியில் பேசிய அவர் “நான் செய்யவில்லை” என்றார்.

தனது செயல் கட்டியணைப்பதுபோல தோற்றமளித்தாலும் தான் அவ்வாறு செய்யவில்லை என்று அவர் விளக்கமளித்தார்.

“அறிக்கை நடுநிலையாக இல்லை. கவனமாக விசாரிக்க வேண்டும்,” என்று மேயர் ஹிடியோ கொஜிமா கேட்டுக் கொண்டார்.

திரு கொஜிமா இன்னமும் குற்றச்சாட்டு அறிக்கையை முழுமையாக படிக்கவில்லை என என்எச்கே தகவல் தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்