முன்னாள் மூத்த துணை அமைச்சர் செங் ஜிட் கூன் மார்ச் 1ஆம் தேதி காலமானார்.
அவருக்கு வயது 90.
திரு செங்கின் அரசியல் வாழ்க்கை 1968ஆம் ஆண்டில் தொடங்கியது.
மக்கள் செயல் கட்சியின் முன்னோடி உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.
1968லிருந்து 1991ஆம் ஆண்டு வரை தியோங் பாருவின் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் சேவையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, 1991லிருந்து 1996ஆம் ஆண்டு வரை புக்கிட் மேராவின் நாடாளுமன்ற உறுப்பினராகத் திரு செங் சேவையாற்றினார்.
1975லிருந்து 1996ஆம் ஆண்டு வரை தஞ்சோங் பகார் அடித்தள அமைப்பின் இரண்டாம் ஆலோசகராக திரு செங் செயல்பட்டார்.
திரு செங் 1985லிருந்து 1991 வரையில் சமூக மேம்பாட்டு மூத்த துணை அமைச்சராகப் பதவி வகித்தவர்.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்கத் தலைவர்களுக்கும் பொதுமக்களுக்கும், குறிப்பாக சீன சமூத்தினருக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்தும் பொறுப்பை திரு செங்கிற்கு சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் யூ தந்திருந்தார்.
மிகச் சிறந்த மக்கள் தொடர்புத் திறனைத் திரு செங் கொண்டிருந்ததாக திரு லீ குவான் யூ தாம் எழுதிய நூல்களில் ஒன்றில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திரு செங் 1996ஆம் ஆண்டில் அரசியலிலிருந்து ஓய்வுபெற்றார்.
2015ஆம் ஆண்டு தேசிய தின விருதளிப்பு விழாவில் உன்னத சேவை விருது பெற்ற ஆறு பேரில் திரு செங்கும் ஒருவர்.

