‘சிங்கப்பூர் வந்தால் ஏழைதான்’: செலவு அதிகம் என விவாதிக்கும் இணையவாசிகள்

புத்தாண்டு வார இறுதியில் சிங்கப்பூருக்கு ஒரு நாள் வந்தபோது திட்டமிட்டதைக் காட்டிலும் 30% அதிகம் செலவானதாக சுற்றுப்பயணி ஒருவர் தெரிவித்தார்.

இந்தோனீசியாவுக்குச் செல்லும் வழியில் ஒரு நாள் சிங்கப்பூரில் தங்கியபோது 1,500 யுவான் (S$280) செலவழித்தார். இந்தோனீசியாவில் அதிகபட்சம் 600 யுவான்தான் அவருக்கு ஒரு நாளில் செலவானது.

விசா விலக்குத் திட்டம் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் நடப்புக்கு வந்ததை அடுத்து சிங்கப்பூருக்கு வருகையளிப்பதில் அதிகச் செலவுகள் அடங்கியிருப்பதாக சீன ஊடகங்களில் சூடாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, சிங்கப்பூர் வருவதற்குரிய விசாவைப் பெற, சீன சுற்றுப்பயணிகள் 300 யுவான் செலுத்த வேண்டியிருந்தது.

தற்போது 30 நாள் வரை சிங்கப்பூரர்கள் சீனாவிலும் சீனநாட்டவர் சிங்கப்பூரிலும் விசா இன்றி தங்கலாம்.

‘விசா இன்றி சிங்கப்பூர் செல்லோர் கவனமாக இல்லாவிட்டால் ஏழையாகிவிடலாம்’ என்ற ‘ஹேஷ்டேக்’ (#), சீனாவின் ‘வெய்போ’ வலைப்பதிவுத் தளத்தில் அதிகம் தேடப்பட்ட தொடராக உருவெடுத்துள்ளது.

இதுவரை அந்த ‘ஹேஷ்டேக்’, 310 மில்லியன் பார்வைகளையும் 9,000க்கும் அதிகமான கலந்துரையாடல் பதிவுகளையும் ஈர்த்துள்ளது.

எம்ஆர்டியில் சாப்பிட்டால் $500 அபராதம், தடைசெய்யப்பட்ட இடங்களில் புகைபிடித்தால் $1,000 அபராதம், பொது இடங்களில் எச்சில் உமிழ்தல், குப்பை போடுதல் ஆகியவற்றுக்கு $1,000 அபராதம் என சிங்கப்பூர் விதிக்கும் அபராதங்களால் அந்நாடு அதிக செலவுமிக்கதாக உள்ளது என்றும் சிலர் கருத்துரைத்துள்ளனர்.

இந்நிலையில், உற்பத்தித் துறையைப் பெரிதும் நம்பியுள்ள சிங்கப்பூர், செலவுமிக்கதாக விளங்குவது புரிந்துகொள்ளக்கூடியதே என்றும் சிலர் கூறுகின்றனர்.

தங்கும் வசதிகள், போக்குவரத்து, ஒருசில உணவு பானப் பிரிவுகள் ஆகியவை சீனாவைக் காட்டிலும் கூடுதல் செலவு வைத்தாலும் உணவங்காடி நிலையங்கள் போன்ற தெரிவுகளை நாட முடியும் என்று சுட்டினர் அவர்கள்.

இந்தப் புகார்களுக்கு இடையே, சிங்கப்பூருக்கு வருகையளித்த சீனநாட்டவர் எண்ணிக்கை அதிகரித்திருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!