கதவில் சாயம் தெளிப்பு; ‘கடைசி எச்சரிக்கை’ சீட்டு ஒட்டிவைப்பு

கதவில் சாயம் தெளிப்பு; ‘கடைசி எச்சரிக்கை’ சீட்டு ஒட்டிவைப்பு

1 mins read
8a632b0c-e0cf-4480-970c-3fb408d8047e
படம். - ஸ்டோம்ப்

ஈசூன் அவென்யூ 4ல் உள்ள ஒரு வீட்டின் கதவு, கம்பி சட்டம் ஆகியவற்றில் சாயம் தெளிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறைக்கு பிப்ரவரி 29 தகவல் தெரிவிக்கப்பட்டது..

இதைத் தொடர்ந்து 24, 20 வயதுடைய இரு ஆடவர்கள் வெவ்வேறு கடன்தொல்லை சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டனர்.

இது குறித்த முதல் சம்பவத்தில் காவல் துறைக்கு பிப்ரவரி 28ஆம் தேதி தகவல் கிடைத்தது. அதில் கேன்பரா ஸ்திரீட்டிலுள்ள ஒரு வீட்டின் கதவிலும் கம்பி சட்டத்திலும் நீலநிற சாயம் தெளிக்கப்பட்டிருந்தது.

காவல் துறை மேற்கொண்ட விசாரணை, காவல் துறை கேமராக்களில் இருந்த படங்களின் மூலம் உட்லண்ட்ஸ், பிடோக் காவல் துறை அதிகாரிகள், 24 வயது ஆடவரை கிங்ஸ் ஜார்ஜ் அவென்யூவில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஆடவர் சிங்கப்பூர் முழுவதும் பல கடன்தொல்லை சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரண்டாவது சம்பவத்தில் ஈசூன் அவென்யூ 4ல் உள்ள ஒரு வீட்டின் கதவு, கம்பிச் சட்டம் ஆகியவற்றில் சிவப்பு, மஞ்சள் நிறங்களில் சாயம் தெளிக்கப்பட்டிருந்தது.

சைக்கிள் வண்டிக்கு போடப்படும் பூட்டு வீட்டின் கதவு கம்பிச் சட்டத்தில் மாட்டப்பட்டு ‘கடைசி எச்சரிக்கை’ என்ற துண்டுச் சீட்டும் ஒட்டி வைக்கப்பட்டிருந்தது.

இதில், உட்லண்ட்ஸ் பிரிவு காவல் துறை அதிகாரிகள் உட்லண்ட்ஸ் சென்ட்ரலில் 20 வயது ஆடவரை கைது செய்தனர்.

குறிப்புச் சொற்கள்