மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு சிங்கப்பூரில் உள்ள பல வட்டாரங்களில் நடத்திய அதிரடிச் சோதனையின் விளைவாக 119 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களில் 18 வயது பெண்ணும் ஒருவர்.
$343,000 பெறுமானமுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
கிளமெண்டி, கேலாங், பொங்கோல், செம்பவாங், தெம்பனிஸ், உட்லண்ட்ஸ் முதலிய வட்டாரங்களில் பிப்ரவரி 19ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதி வரை அதிகாரிகள் அதிரடிச் சோதனைகளை நடத்தினர்.
பிப்ரவரி 19ஆம் தேதி நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையின்போது, பெண் அதிகாரியை நோக்கி கத்தியுடன் பாய்ந்த போதைப் பித்தர் என்று சந்தேகிக்கப்படும் 19 வயது இளையர் கைது செய்யப்பட்டார்.
கிளமெண்டி அவென்யூ 4ல் உள்ள ஒரு வீட்டில் அவருடன் இருந்த 21 வயது சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.

