இசை நிகழ்ச்சி மூலம் எதிர்பார்க்கப்படும் பொருளியல் பலன் வழங்கிய மானியத்தை விட அதிகம்: எட்வின் டோங்

1 mins read
dee47038-6a6a-45b8-a8bc-e6f6835caddd
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சும் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் இணைந்து நேரடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளருடன் பணிபுரிந்ததாக திரு எட்வின் டோங் கூறினார். - படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

சிங்கப்பூரில் நடந்துவரும் டெய்லர் ஸ்விஃப்ட் இசை நிகழ்ச்சி மூலம் எதிர்பார்க்கப்படும் பொருளியல் பலன்கள் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும் என கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் திங்கட்கிழமை தெரிவித்தார்.

டெய்லர் ஸ்விஃப்ட்டின் ஆறு இசை நிகழ்ச்சிகளை சிங்கப்பூரில் நடத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் வழங்கிய மானியத்தை காட்டிலும் பொருளியல் பலன்கள் கூடுதலாக இருக்கும் என்றார் அவர்.

இந்த இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் வருவாய் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு கூறினார்.

குறிப்புச் சொற்கள்