தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் உள்ள போலியான நிறுவனங்கள் இந்தியாவில் பண மோசடி செய்ய உதவி

1 mins read
93d86c69-79bc-4b79-b8d9-6801b6631885
படம்: - பிக்சாபே

சிங்கப்பூரில் செயல்படும் போலியான நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள போலியான நிறுவனங்களுக்கு மென்பொருள் உள்ளிட்ட சேவைகள் வழங்கியதாக பொய்யான ரசீதுகளை கொடுத்துள்ளதாக இந்திய அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

இதன்மூலம் பெரிய அளவில் பண மோசடி நடந்திருக்கலாம் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். பிப்ரவரி 28ஆம் தேதி அது குறித்த செய்தியை இந்திய அதிகாரிகள் வெளியிட்டனர்.

சீனாவைத் தளமாகக் கொண்டு கடன், சூதாட்டம் வழங்கும் செயலிகள் மூலம் கிடைத்த பணத்தை இந்தியாவில் உள்ள போலியான நிறுவனங்கள் சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளன. சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள வங்கிக் கணக்குகள் மூலம் கிட்டத்தட்ட 20 மில்லியன் வெள்ளி சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்
நிதி மோசடி