மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் உடல்நலக் குறைவு; பள்ளி முகாம் சுருக்கிக்கொள்ளப்பட்டது

1 mins read
48d225ea-e316-4be5-aa03-adc6255acc50
முகாமில் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட பின்னர் 26 மாணவர்களுக்கும் ஆசிரியர் ஒருவருக்கும் உடல்நலம் சரியில்லாமல் போனது. - படம்: நார்த்புருக்ஸ் உயர்நிலைப் பள்ளி

நார்த்புருக்ஸ் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த உயர்நிலை 1 மாணவர்களுக்கான மூன்று நாள் முகாம் பிப்ரவரி 29ஆம் தேதி சுருக்கிக்கொள்ளப்பட்டது.

முகாமில் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட பின்னர் 26 மாணவர்களுக்கும் ஆசிரியர் ஒருவருக்கும் உடல்நலம் சரியில்லாமல் போனதே அதற்குக் காரணம்.

மார்ச் 1ஆம் தேதி நிலவரப்படி, ஈசூனில் உள்ள அப்பள்ளியைச் சேர்ந்த 27 பேர் இரைப்பைக் குடலழற்சியால் பாதிக்கப்பட்டதாக சிங்கப்பூர் உணவு அமைப்பும் சுகாதார அமைச்சும் திங்கட்கிழமை தெரிவித்தன.

இச்சம்பவம் தொடர்பில் யாரும் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை என்று குறிப்பிட்ட அவ்விரு அமைப்புகள், இதுகுறித்து விசாரணை நடத்தப்படுவதாகக் கூறின.

குறிப்புச் சொற்கள்
மாணவர்பள்ளி