சிங்கப்பூரை தூய்மையான, பசுமையான, மீள்தன்மையுடைய எதிர்காலம் ஆகியவற்றுடன் உயர்நிலை தூய்மையை உறுதி செய்ய பல்வேறு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதோடு 2024ஆம் ஆண்டை தூய்மையான ஆண்டாகக் கடைப்பிடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 4ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, உயர்மட்ட பொதுச் சுகாதாரம் நீடித்திருக்க அனைவரின் வலுவானப் பங்களிப்பு தேவை என்று குறிப்பிட்டார்.
அரசாங்கம், வர்த்தகங்கள், சமூகங்கள், தனிப்பட்டவர்கள் இணைந்து செயல்பட்டு தூய்மையான சுற்றுச் சூழல், பாதுகாப்பான உணவு, தூய்மையான காற்று, தூய்மையான தண்ணீர் ஆகியவற்றுக்குப் பங்காற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அமலாக்க முயற்சிகளை வலுப்படுத்த உதவும் வகையில் சுற்றுச் சூழல் தொழில்துறைகளுக்கு ஆதரவு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.